×

தமிழ்நாட்டின் எந்த பகுதியிலும் சிப்காட் அமைக்க விளைநிலங்களை அரசு கையகப்படுத்தக்கூடாது: அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: தமிழ்நாட்டின் எந்த பகுதியிலும் சிப்காட் அமைக்க விளைநிலங்களை அரசு கையகப்படுத்தக்கூடாது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது; திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு சிப்காட் வளாகத்தின் விரிவாக்கத்திற்காக மேல்மா, குறும்பூர் உள்ளிட்ட 11-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து 2700 ஏக்கருக்கும் கூடுதலான விளைநிலங்களை கையகப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

அன்னூர் பகுதியில் சிப்காட் அமைக்க நிலங்களை கையகப்படுத்த உழவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து விளைநிலங்கள் கையகப்படுத்தப்படாது என்று தமிழக அரசு அறிவித்தது. அந்த நிலைப்பாட்டை தமிழகத்தின் பிற பகுதிகளில் கடைபிடிக்க தமிழக அரசு மறுப்பது தவறு. தமிழ்நாட்டின் எந்த பகுதியிலும் சிப்காட் தொழிற்பூங்கா அமைப்பதற்காக விளைநிலங்கள் கையகப்படுத்தப்படாது என்பதை கொள்கை அறிவிப்பாக தமிழக அரசு வெளியிட வேண்டும். செய்யார் தொழிற்பூங்கா விரிவாக்கத்திற்கு நிலம் எடுக்கும் திட்டத்தை அரசு ரத்து செய்யவேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.

The post தமிழ்நாட்டின் எந்த பகுதியிலும் சிப்காட் அமைக்க விளைநிலங்களை அரசு கையகப்படுத்தக்கூடாது: அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Cipkat ,Tamil Nadu ,Anmani Ramadas ,Chennai ,Bambayana ,Annpurani Ramadas ,Sibkat ,Anbarani Ramadas ,
× RELATED தமிழ்நாடு காவல்துறையின் ஃபேஸ்...