×

பொதுமக்கள் சாலை மறியல்

 

சிங்கம்புணரி, ஜூலை 22: சிங்கம்புணரி அருகே எஸ்.புதூர் ஒன்றியம் வாராப்பூர் ஊராட்சிக்கு உட்பட்ட குரும்பலூர், சடையன்பட்டி, கிராமங்களில் குறைந்த மின்னழுத்தம் நிலவி வருகிறது. இதனால் மின்மோட்டார்கள், இயக்க முடியாமல் தண்ணீர் பற்றாக்குறை, மற்றும் மின்சாதனங்கள் பழுதடைந்து வருவதாக கூறி பல முறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி 100க்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டத்தில் நேற்று ஈடுபட்டனர். இதையடுத்து உலகம் பட்டி இன்ஸ்பெக்டர் கலாராணி தலைமையில் போலீசார் பேச்சு வார்த்தை நடத்தினர். இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

The post பொதுமக்கள் சாலை மறியல் appeared first on Dinakaran.

Tags : Singampunari ,Kurumbalur ,Sadayanpatti ,Warapur Panchayat ,S. Putur Union ,Dinakaran ,
× RELATED சிங்கம்புணரியில் எருதுகட்டு விழா