×

கார்கள் மோதிக்கொண்ட விபத்தில் 7 பேர் காயம்

 

சிவகங்கை, ஜூலை 22: சிவகங்கை சுற்றுச் சாலையில் கார்கள் மோதி கொண்ட விபத்தில் 7 பேர் காயமடைந்தனர். கேரள மாநிலம் கொல்லம் பகுதியைச் சேர்ந்தவர் ஜோன்ஜோஸ்(51). இவர் மற்றும் அதே பகுதியை சேர்ந்த ஜான்சன்(51), சக்ரியன்(51) ஆகிய மூன்று பேரும் வேளாங்கண்ணிக்கு செல்வதற்காக நேற்று காரில் வந்தனர். சிவகங்கை, மதுரை சாலையில் சுற்றுச் சாலை அருகே வரும் பொழுது, மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள உத்திராம்பட்டி கிராமத்தில் இருந்து பார்த்திபனூரை நோக்கி சென்ற காரும் ஒன்றுடன் ஒன்று மோதி கொண்டது.

இச்சம்பவத்தின் போதே பில்லுரை சேர்ந்த அய்யனார் என்பவர் டூவீலரில் சாலையை கடக்க நின்று கொண்டிருந்தார். அப்போது அவரது டூவீலர் மீதும் கார் மோதியது. அடுத்தடுத்து நடைபெற்ற இந்த விபத்தில் கொல்லத்தில் இருந்து வந்த காரில் இருந்த 4பேரும், உத்திராம்பட்டியில் இருந்து வந்த காரில் இருந்த ஜஹாங்கீர்(43), ஷகிலாபானு(37), தங்கமீரான்(47), டூவீலரில் வந்த அய்யனார் ஆகிய 7 பேரும் காயமடைந்தனர். காயம்பட்ட அனைவரும் சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். விபத்து குறித்து சிவகங்கை நகர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

The post கார்கள் மோதிக்கொண்ட விபத்தில் 7 பேர் காயம் appeared first on Dinakaran.

Tags : Sivagangai ,Sivagangai Ring Road ,Kerala ,Dinakaran ,
× RELATED பள்ளியில் எமிஸ் பதிவுகளில் இருந்து...