×

மாநில அளவில் நடந்த தமிழ் கட்டுரை போட்டியில் 3ம் பரிசு பெற்ற கல்லூரி மாணவி

திருப்புத்தூர், ஜூலை 22: மாநில அளவில் நடந்த தமிழ் கட்டுரை போட்டியில் புதுக்கோட்டை மவுண்ட் சீயோன் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் முதலாம் ஆண்டு மாணவி எஸ்.மித்ரா மாநில அளவில் 3ம் பரிசு பெற்றார். பெருந்தலைவர் கர்மவீரர் காமராசரின் 121-வது பிறந்த தினத்தை முன்னிட்டு, தேனி மாவட்டம் நாடார் சரஸ்வதி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மாநில அளவில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவியர்களுக்கு பல வகையான திறன் அறியும் போட்டிகளை நடத்தியது.

இப்போட்டிகளில் புதுக்கோட்டை மவுண்ட் சீயோன் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் முதலாம் ஆண்டு கணினி அறிவியல் மற்றும் பொறியியல்துறை மாணவி எஸ்.மித்ரா, ‘நாட்டுக்கு உழைத்த நல்லவர்’ என்ற தலைப்பில் காமராசர் குறித்து எழுதிய தமிழ் கட்டுரையானது மாநில அளவில் மூன்றாம் பரிசுக்கான கட்டுரையாக அறிவிக்கப்பட்டது.

பரிசளிப்பு விழாவில் தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின் முறை சங்கத்தலைவர் ராஜமோகன், கல்லூரி மாணவி மித்ராக்கு சான்றிதழ் மற்றும் மூன்றாம் பரிசை வழங்கினார். இப்போட்டியில் கலந்து கொண்டு மாநில அளவில் பரிசு பெற்ற மாணவி மித்ரா-வை மவுண்ட் சீயோன் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் இயக்குனர் முனைவர் ஜெய்சன் கீர்த்தி ஜெயபரதன் மற்றும் கல்லூரி முதல்வர் பாலமுருகன், ஆகியோர் பாராட்டி வாழ்த்தினர்.

The post மாநில அளவில் நடந்த தமிழ் கட்டுரை போட்டியில் 3ம் பரிசு பெற்ற கல்லூரி மாணவி appeared first on Dinakaran.

Tags : level Tamil Essay Competition ,Tiruputhur ,Pudukottai Mount Zion Engineering and Technology ,State Level Tamil Essay Competition ,Dinakaran ,
× RELATED கஞ்சா கடத்திய வாலிபர் கைது