×

தாராபுரம் மெடிக்கல் சென்டர் மருந்தகம் நாளை திறப்பு

 

தாராபுரம், ஜூலை 22: திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் தாராபுரம் மெடிக்கல் சென்டர் மற்றும் மருந்தகம் நாளை திறப்பு விழா நடைபெறுகிறது. தாராபுரம் அலங்கியம் ரோடு சிக்னல் அருகே தாராபுரம் மெடிக்கல் சென்டர் மற்றும் மருந்தகம் திறப்புவிழா நிகழ்ச்சி நாளை நடைபெறுகிறது. மெடிக்கல் சென்டர் கட்டிடத்தை தழிழ் வளர்ச்சிதுறை மற்றும் செய்திதுறை அமைச்சர் சாமிநாதனும், மருந்தகத்தை ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜூம், மருத்துவமணையை கோவை கே.ஜி.மருத்துவமணை சேர்மன் டாக்டர் பக்தவச்சலமும், பரிசோதனை கூடத்தை கலெக்டர் கிறிஸ்துராஜூம், பல் சிகிச்சை பிரிவை திருப்பூர் மாவட்ட காவல் காண்காணிப்பாளர் சாமிநாதனும், நடமாடும் மருத்துவ பிரிவை நகராட்சிகளின் மண்டல இயக்குநர் டாக்டர் இளங்கோவனும், ஸ்கேன் சென்டரை கோபி அபி எஸ்.கே.மருத்துவமணை சேர்மன் டாக்டர் செந்தில்நாதனும், எக்ஸ்ரே பிரிவை பொள்ளாச்சி டாக்டர் மகேந்திரனும், அம்புலன்ஸ் சேவை பிரிவை திருப்பூர் மாநகராட்சி 4ம் மண்டல தலைவர் பத்மநாபனும் திறந்து வைக்க உள்ளனர்.

இம்மருத்துவமனையில் எமர்ஜென்சி பிரிவு, பல் சிகிச்சைபிரிவு, நவீன லேப் வென்டிலேட்டர் உடன் கூடிய ஆம்புலன்ஸ் சேவை, மருந்தகம், மொபல் மெடிக்கல் யூனிட், அல்ட்ராசவுண்ட் ஸ்கேன், ஹைடெக் டிஜிட்டல் எக்ஸ்ரே உள்பட பல்வேறு வசதிகள் உள்ளன. சிறப்பு மருத்துவர்களும் அனைத்து பிரிவுகளிலும் சிகிச்சை அளிக்க உள்ளனர். 24 மணிநேரம் செயல்படும் எமர்ஜென்சி யூனிட்டும் உள்ளது. மருந்துகளுக்கு 15 சதவீகித தள்ளுபடி வழங்கப்படுவது சிறப்பு அமசாமாகும். தாராபுரம் பகுதியில் எழை எளிய மக்களின் நலம் காக்க இம்மருத்துவமணை துவக்கப்பட உள்ளதாக அனிதா டெக்ஸ்காட் சேர்மனும் எல்லப்பாளையம் ஆறுமுகம் அறக்கட்டளையின் நிறுவன தலைவரும், தாராபுரம் மெடிக்கல் சென்டர் சேர்மனுமாகிய அனிதா சந்திரசேகரன் தெரிவித்தார்.

The post தாராபுரம் மெடிக்கல் சென்டர் மருந்தகம் நாளை திறப்பு appeared first on Dinakaran.

Tags : Tharapuram Medical Center ,Dharapuram ,Dharapuram Medical Center ,Dharapuram, Tirupur district ,Dharapuram Medical Center Dispensary ,Dinakaran ,
× RELATED கல்வி வளர்ச்சி நாளை முன்னிட்டு...