×

வரும் 31ம் தேதி வரை கிண்டி அரசினர் மகளிர் ஐடிஐயில் நேரடி சேர்க்கை: சென்னை கலெக்டர் தகவல்

சென்னை: சென்னை கிண்டி அரசினர் மகளிர் ஐடிஐயில் வரும் 31ம் தேதி வரை நேரடி சேர்க்கை நடைபெற உள்ளதாக சென்னை கலெக்டர் அருணா தெரிவித்துள்ளார். இதுகுறித்து, சென்னை மாவட்ட கலெக்டர் அருணா வெளியிட்ட அறிவிப்பு: கிண்டி அரசு மகளிர் தொழிற்பயிற்சி நிலையத்தில் 2023ம் ஆண்டிற்கான நேரடி சேர்க்கை வருகிற 31ம் தேதி வரை பொறியியல் மற்றும் பொறியியல் அல்லாத 8 தொழிற்பிரிவுகளில் நடக்கிறது. இந்த பிரிவுகளில் 8 மற்றும் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற அனைத்து வயதினரும் சேர்க்கை பெறலாம். பயிற்சிக்கு எந்தவித கட்டணமும் வசூலிக்கப்பட மாட்டாது. பயிற்சி காலத்தில் உதவி தொகையாக மாதம்தோறும் ரூ.750, பயிற்சியில் சேரும் அனைவருக்கும் இலவச சீருடை, பாடப்புத்தகம், மிதிவண்டி, காலணி உள்ளிட்டவையும் இலவசமாக வழங்கப்படும்.

பயிற்சியின்போது தொழிற்சாலைகள் மூலம் இன்டன்ஷிப் பயிற்சி மற்றும் இன்பிளான்ட் பயிற்சி அளிக்கப்படுவதுடன் பயிற்சி முடிந்தவுடன் முன்னணி நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெற்று தரப்படும். இந்த தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர விரும்புபவர்கள் கிண்டி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் செயல்படும் சேர்க்கை உதவி மையத்தை அணுகி சேர்க்கை மேற்கொள்ளலாம். கூடுதல் விவரங்களை 044-22510001, 8248738413 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

The post வரும் 31ம் தேதி வரை கிண்டி அரசினர் மகளிர் ஐடிஐயில் நேரடி சேர்க்கை: சென்னை கலெக்டர் தகவல் appeared first on Dinakaran.

Tags : Guindi Govt. ,Chennai ,Chennai Government ,Chennai Government Women's ,Dinakaran ,
× RELATED சவ ஊர்வலத்தின்போது பட்டாசு வெடித்தவரின் கைவிரல் துண்டானது