×

மின் கசிவால் பிரிட்ஜ் வெடித்து தீ விபத்து சேத்துப்பட்டு அரசு மருத்துவமனையில்

சேத்துப்பட்டு, ஜூலை 22: சேத்துப்பட்டு அரசு மருத்துவமனையில் மின் கசிவால் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் ஆய்வகப்பொருட்கள், ஆவணங்கள் எரிந்து தீக்கிரையாகின. சேத்துப்பட்டு போளூர் சாலையில் உள்ள அரசு மருத்துவமனையில் நேற்று காலை ஆய்வக ஊழியர் புஷ்பராஜ் ஆய்வகத்தை திறந்து பார்த்த போது மின் கசிவு ஏற்பட்டு பிரிட்ஜ் வெடித்து அங்கிருந்த பொருட்கள் எரிந்து கொண்டிருந்தது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவர் அங்கிருந்த தீயணைப்பான் மூலம் தீயை அணைக்க முயன்றார். ஆனால் அதற்குள் தீ முழுவதும் பரவியதால் இதுகுறித்து சேத்துப்பட்டு தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் சரவணன் தலைமையில் தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்து ஆய்வகப்பகுதியில் ஏரிந்து கொண்டிருந்த தீயை போராடி அணைத்தனர். இதில் ஆய்வகத்திற்கு பயன்படுத்தக்கூடிய உபகரணங்கள், ஆவணங்கள் தீயில் கருகின. அரசு மருத்துவமனையில் அதிகாலையில் ஏற்பட்ட மின் கசிவால் பொது மக்கள் மற்றும் ஊழியர்களுக்கு பாதிப்பின்றி பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

The post மின் கசிவால் பிரிட்ஜ் வெடித்து தீ விபத்து சேத்துப்பட்டு அரசு மருத்துவமனையில் appeared first on Dinakaran.

Tags : Bridge ,Chetupatta ,Chetupat Government Hospital ,
× RELATED மின்னணு தேசிய வேளாண் சந்தை நடைமுறை...