×

செப்டம்பரில் கைலாஷ் மானசரோவர் யாத்திரை தொடக்கம்

பித்தோராகர்: இமயமலையின் மேற்கு தொடரில் திபெத் எல்லைப் பகுதியை ஒட்டி 6638 மீட்டர் உயரத்தில் வைர வடிவில் உள்ள கயிலாய மலையில் சிவனும், பார்வதியும் வசிப்பதாக ஐதீகம். அதன் அருகில் மானசரோவர் ஏரி அமைந்துள்ளது. கயிலாய மலை சிவனை தரிசிக்க திபெத், உத்தரகாண்ட், நேபாளம் வழியாக ஆண்டுதோறும் ஏராளமான பக்தர்கள் புனித யாத்திரை மேற்கொண்டு வருகின்றனர். யாத்திரை செல்வோர் லிபுலேக் பகுதியை கடந்து 53 கிலோ மீட்டர் தூரம் நடந்துதான் செல்ல வேண்டும்.

இந்நிலையில் கொரோனா தொற்று காரணமாக நிறுத்தப்பட்ட யாத்திரை மீண்டும் தொடங்கப்படவில்லை. இந்நிலையில் உத்தரகாண்ட் மாநிலம் பித்தோராகர் மாவட்டம் நபிதங் பகுதியில் இருந்து இந்திய சீன எல்லையை கடக்கும் லிபுலேக் பகுதி வழியே செல்ல புதிய பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் முடிவடைந்ததும், வானிலை சாதகமாக இருந்தால் செப்டம்பரில் யாத்திரை தொடங்கும்” என எல்லை சாலைகள் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post செப்டம்பரில் கைலாஷ் மானசரோவர் யாத்திரை தொடக்கம் appeared first on Dinakaran.

Tags : Kailash Mansarovar Yatra ,Pithoragarh ,Kailaya ,Himalayas ,Kailash ,Dinakaran ,
× RELATED வெள்ளியங்கிரி மலையில் தொடரும் சோகம்:...