×

கேரள அரசு சினிமா விருதுகள் அறிவிப்பு சிறந்த நடிகர் மம்மூட்டி, நடிகை வின்சி அலோஷியஸ்: சிறந்த படம் நண்பகல் நேரத்து மயக்கம்

திருவனந்தபுரம்: கேரள அரசின் 53வது மாநில சினிமா விருதுகள் நேற்று திருவனந்தபுரத்தில் அறிவிக்கப்பட்டன. கேரள கலாச்சாரத் துறை அமைச்சர் சஜி செரியான் விருதுகளை அறிவித்தார். விருதுகள் குறித்த விவரங்கள் வருமாறு: சிறந்த நடிகர் மம்மூட்டி (படம்-நண்பகல் நேரத்து மயக்கம்), சிறந்த நடிகை வின்சி அலோஷியஸ் (படம்- ரேகா), சிறந்த படம்- லிஜோ ஜோஸ் பெல்லிசேரி இயக்கிய நண்பகல் நேரத்து மயக்கம்.

சிறந்த இயக்குனர் மகேஷ் நாராயணன்- படம் அறியிப்பு, சிறந்த புதுமுக இயக்குனர் ஷாஹி கபீர் – படம் இலவீழா பூஞ்சிறா, சிறந்த பாடகர் கபில் கபிலன், பாடகி மிருதுளா வாரியர், சிறந்த பாடலாசிரியர் ரபீக் அகமது, சிறந்த இசையமைப்பாளர் எம். ஜெயச்சந்திரன். நடிகர் மம்மூட்டிக்கு இது, சிறந்த நடிகருக்கான 8வது மாநில விருது என்பது குறிப்பிடத்தக்கது.

The post கேரள அரசு சினிமா விருதுகள் அறிவிப்பு சிறந்த நடிகர் மம்மூட்டி, நடிகை வின்சி அலோஷியஸ்: சிறந்த படம் நண்பகல் நேரத்து மயக்கம் appeared first on Dinakaran.

Tags : Kerala Government Cinema Awards ,Mammootty ,Vinci Alosius ,Thiruvananthapuram ,53rd State Cinema Awards of ,Government of Kerala ,Kerala ,Culture ,Minister ,Saji ,Vinci Alossius ,
× RELATED மம்மூட்டிக்கு வித்யா பாராட்டு