×

கொரியா ஓபன் பேட்மின்டன்: அரையிறுதியில் சாத்விக் – சிராக்

யோசு: கொரியா ஓபன் பேட்மின்டன் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் விளையாட இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ் – சிராக் ஷெட்டி இணை தகுதி பெற்றது. காலிறுதியில் ஜப்பானின் டக்யூரோ ஹோகி – யுகோ கோபாயாஷி இணையுடன் நேற்று மோதிய சாத்விக் – சிராக் ஜோடி 21-14, 21-17 என்ற நேர் செட்களில் வென்று அரையிறுதிக்கு முன்னேறியது. இப்போட்டி 40 நிமிடங்களில் முடிவுக்கு வந்தது. இன்று நடைபெற உள்ள அரையிறுதியில் சீனாவின் வேய் கெங் லியாங் – சாங் வாங் இணையுடன் இந்திய இணை மோதுகிறது.

The post கொரியா ஓபன் பேட்மின்டன்: அரையிறுதியில் சாத்விக் – சிராக் appeared first on Dinakaran.

Tags : Korea Open Badminton ,Chadwick ,Chirac ,Yosu ,India ,Satvik Sairaj - Chirag Shetty ,Satvik ,Chirag ,Dinakaran ,
× RELATED சீனா மாஸ்டர்ஸ் பேட்மின்டன்...