×

காஞ்சிபுரத்தில் ரூ.250 லட்சத்தில் காமாட்சியம்மன் கைத்தறி பட்டு விற்பனை நிலையம்: அமைச்சர்கள் திறந்து வைத்தனர்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் ரூ.250 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட புதிய காமாட்சியம்மன் கைத்தறி பட்டு கூட்டுறவு சங்க விற்பனை நிலையத்தினை அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், காந்தி ஆகியோர் திறந்து வைத்தார். காஞ்சிபுரம் வழக்கறுத்தீஸ்வரர் கோயில் தெருவில், தமிழ்நாடு அரசு கைத்தறி ஆதரவு திட்டத்தின் கீழ் ரூ.250 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்ட காமாட்சியம்மன் பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்க விற்பனை நிலையம் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமை தாங்கினார். கைத்தறி கைத்திறன், துணிநூல் மற்றும் கதர்த்துறை அரசு முதன்மை செயலாளர் தர்மேந்திர பிரதாப் யாதவ் முன்னிலை வகித்தார்.

இந்நிகழ்ச்சியில், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி கலந்துகொண்டு, ரூ.250 லட்சம் மதிப்பில் காமாட்சியம்மன் பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்க புதிய விற்பனை நிலையத்தினை திறந்து வைத்து, முதல் விற்பனையை தொடங்கி வைத்தார். பின்னர், நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில், நெசவாளர் முத்ரா திட்டத்தின் கீழ், 10 நெசவளர்களுக்கு ரூ.5 லட்சம் கடனுதவி மற்றும் கைத்தறி ஆதரவு திட்டத்தின் கீழ், 24 நெசவாளர்களுக்கு ரூ.48 லட்சம் மதிப்பில் மின்னணு ஜக்கார்டு இயந்திரங்கள், சேமிப்பு மற்றும் பாதுகாப்பு திட்டத்தின் கீழ், 7 நெசவாளர்களுக்கு ரூ.17.80 லட்சம் உதவித்தொகை ஆகியவற்றை பயனாளிகளுக்கு, அமைச்சர் காந்தி வாங்கினார்.

அப்போது, காஞ்சிபுரம் காமாட்சியம்மன் பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்க புதிய விற்பனை நிலையத்தின் விற்பனையை மேம்படுத்துவது தொடர்பாக அறிவுரைகள் வழங்கினார். இந்நிகழ்ச்சியில், கைத்தறி ஆணையர் விவேகானந்தன், காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி மோகன், எம்எல்ஏக்கள் சுந்தர், எழிலரசன், மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ், மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் நித்தியாசுகுமார், இணை இயக்குனர் கணேசன், டிடி ஆனந்த் காமாட்சியம்மன் பட்டு கூட்டுறவு சங்க தலைவர் ஸ்டாலின், உள்ளாட்சி பிரதிநிதிகள், பட்டுப்பூங்கா நிர்வாகிகள், தமிழ்நாடு ஜரிகை ஆலை மேலாண்மை இயக்குநர், நெசவாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post காஞ்சிபுரத்தில் ரூ.250 லட்சத்தில் காமாட்சியம்மன் கைத்தறி பட்டு விற்பனை நிலையம்: அமைச்சர்கள் திறந்து வைத்தனர் appeared first on Dinakaran.

Tags : Kamadsiyamman Linen Silk Outlet ,Kangipura ,Kanchipuram ,Kamadsiyamman Linen Silk Cooperative Union ,Kamadsiamman Linen Silk Station ,Kancheepuram ,
× RELATED காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில்...