×

குடிபோதையில் தகராறு: வாலிபர் கைது

திருத்தணி: குடிபோதையில் தகராறில் ஈடுபட்டு போலீசாருக்கு மிரட்டல் விடுத்து பேசியதில் வாலிபர் ஒருவர் கைது செய்தனர். திருத்தணி மேட்டுத் தெருவில், மூன்று வாலிபர்கள் குடிபோதையில் வாகன ஒட்டிகள் மற்றும் அந்த வழியாக நடந்து செல்லும் பொதுமக்களிடம் தகராறு செய்து வந்தனர். அப்போது, அவ்வழியாக ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த திருத்தணி சிறப்பு எஸ்.ஐ. கடிகாசலம் மற்றும் போலீசாரையும் போதை வாலிபர் மிரட்டினார்.

போலீசார் அந்த வாலிபரை காவல்நிலையம் கொண்டுவந்தனர். விசாரணையில் ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் தாலுகா பள்ளியாங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த சேட்டு மகன் பார்த்திபன் (22) என தெரியவந்தது. தலைமறைவான பார்த்திபனின் கூட்டாளிகளான ஞானமங்கலத்தை சேர்ந்த அருண், சத்திரஞ்ஜெயபுரம் சீனிவாசன் ஆகிய இருவரை போலீசார் தேடிவருகின்றனர்.

The post குடிபோதையில் தகராறு: வாலிபர் கைது appeared first on Dinakaran.

Tags : Thiruthani ,Tiruthani Metuth Street ,
× RELATED சவ ஊர்வலத்தின்போது பட்டாசு வெடித்தவரின் கைவிரல் துண்டானது