×

முகப்பேர் வேலம்மாள் பள்ளியில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு

திருவள்ளூர்: முகப்பேர் வேலம்மாள் பள்ளி, தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறையுடன் இணைந்து நடத்திய பாதுகாப்பான தீபாவளி பற்றிய விழிப்புணர்வு  நிகழ்வு பள்ளி மைதானத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் தீபாவளியன்று பட்டாசு வெடி விபத்துகளை தவிர்த்து சந்தோஷமாகவும், பாதுகாப்புடனும் கொண்டாட மாணவர்களுக்கு ஒத்திகை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக தமிழ்நாடு தீயணைப்பு துறையின் இணை இயக்குனர் பிரியா ரவிச்சந்திரன், மாவட்ட அலுவலர் சரவணன், கூடுதல் மாவட்ட அலுவலர்கள் கார்த்திகேயன், சூர்யபிரகாஷ் ஆகியோர் கலந்துகொண்டனர். அப்போது, தீயணைப்பு வீரர்கள், பட்டாசுகளை பாதுகாப்புடன் வெடிப்பது எவ்வாறு என்பதை பட்டாசுகளை வெடித்து ஒத்திகை செய்து காண்பித்தனர். மேலும், பல்வேறு யுக்திகளை அறிமுகப்படுத்திய வீரர்கள் முதன்மையாக தீயணைப்பான்களின் செயல்முறை விளக்கம், எண்ணெய் தீ விபத்தினை இருசக்கர வாகனத்தின் உதவியுடன் அணைக்கும் புதிய யுக்தி, குடிசைத் தீ மற்றும் மனிதனின் மீதான தீ இவற்றை அணைக்கும் வழிமுறைகள் ஆகியவற்றை செய்து காண்பித்தனர். பின்னர் தீயணைப்பு வீரர்களின் கண்களுக்கு விருந்தளிக்கும் வண்ண நீர் கண்காட்சி நடைபெற்றது. தொடர்ந்து, தமிழ்நாடு தீயணைப்பு குழுவினரின் மேற்பார்வையில் மாணவர்களுக்கு பட்டாசுகள் வெடிக்க வாய்ப்பு வழங்கப்பட்டது….

The post முகப்பேர் வேலம்மாள் பள்ளியில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு appeared first on Dinakaran.

Tags : velammaal school ,Thiruvallur ,Mukheber Velammal School ,Tamil Nadu Fire and Rescue Workstation ,
× RELATED திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள...