×

விலைவாசியை குறைக்க கோரி மதுரவாயலில் அதிமுக ஆர்ப்பாட்டம்

திருவள்ளூர்: தமிழகத்தில் காய்கறி, மளிகை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை குறைக்கக் கோரி ஒருங்கிணைந்த திருவள்ளூர் மாவட்ட அதிமுக சார்பில் நேற்று மதுரவாயலில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முன்னாள் அமைச்சரும், மத்திய மாவட்ட செயலாளருமான பா.பெஞ்சமின் தலைமை தாங்கினார். முன்னதாக பகுதி செயலாளர் ஏ.தேவதாஸ் வரவேற்றார். இதில் காய்கறிகளின் விலை அந்தரத்தில் பறப்பது போல் உணர்த்துவதற்காக தனியாக மேடை அமைத்து அதில் தக்காளி, வெங்காயம், கத்தரிக்காய், முட்டை கோஸ் உள்ளிட்ட பல்வேறு காய்கறிகளை தோரணமாக அந்தரத்தில் கட்டி தொங்க விட்டிருந்தனர்.

மேலும் தக்காளி, கத்தரிக்காய்களை மாலையாக கோர்த்து கழுத்தில் அணிந்து கொண்டு விலைவாசியை குறைக்க கோரி கோஷங்களை எழுப்பினர். மாவட்ட செயலாளர்கள் பி.வி.ரமணா, மாதவரம் வி.மூர்த்தி, சிறுணியம் பி.பலராமன், வி.அலெக்சாண்டர், முன்னாள் அமைச்சர் எஸ்.அப்துல் ரஹீம், முன்னாள் எம்.பிக்கள் டாக்டர் பி.வேணுகோபால், திருத்தணி கோ.அரி, என்.எஸ்.ஜெகந்நாதன், முன்னாள் எம்.எல்.ஏக்கள் இரா.மணிமாறன், கே.குப்பன், எஸ்.விஜயகுமார், பொதுக்குழு உறுப்பினர் காட்டுப்பாக்கம் கே.ராஜகோபால்,

மாவட்ட நிர்வாகிகள் தி.ப.கண்ணன், சி.வை.ஜாவித் அகமத், கே.ஜி.திருநாவுக்கரசு, கமாண்டோ ஏ.பாஸ்கரன், பி.ஜெயபால், த.கவிசந்திரன், மாநகராட்சி கவுன்சிலர் டி.சத்தியநாதன், கே.சதிஷ்குமார், எஸ்.பி.ஆர்.கிஷோர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் ஒன்றிய, நகர, பகுதி செயலாளர்கள் கே.ஜி.டி.கவுதமன், ராஜா, கே.எஸ்.ரவிசந்திரன், வேலப்பன்சாவடி எஸ்.எஸ்.எஸ்.குமார், புட்லூர் ஆர்.சந்திரசேகர், ராமஞ்சேரி எஸ்.மாதவன், டி.டி.சீனிவாசன், இ.என்.கண்டிகை ஏ.ரவி, சூரகாபுரம் கே.சுதாகர், கே.தாமோதரன், இ.கந்தன், எம்.என்.இம்மானுவேல், ஒன்றிய குழு தலைவர் பி.வெங்கட்ரமணா, பெருமாள்பட்டு பி.சீனிவாசன், அந்தமான் முருகன், நேமம் உ.ராகேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post விலைவாசியை குறைக்க கோரி மதுரவாயலில் அதிமுக ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Maduravalam ,Thiruvallur ,Tiruvallur District ,Adinaktuka ,Tamil Nadu ,Maduravalai ,
× RELATED அரசு தொழிற்பயிற்சி மையங்களில் 100% மாணவர் சேர்க்கை : கலெக்டர் அறிவுறுத்தல்