
சென்னை: தமிழகத்தில் 2023 ஏப்ரல் 30ம் தேதி வரையான வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்படி தமிழகத்தில் மொத்தம் 6,12,36,696 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண் வாக்காளர்கள் 3,01,18,904 பேரும், பெண் வாக்காளர்கள் 3,11,09,813 உள்ளனர். இனி, ஒவ்வொரு காலாண்டிலும் (ஜனவரி 1, ஏப்ரல் 1, ஜூலை 1 மற்றும் அக்டோபர் 1) வாக்காளர் பட்டியல் புதுப்பிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி 18 வயது நிறைவடைந்த ஆண்டின் அடுத்த காலாண்டில் தகுதியான இளைஞர்கள் தங்களை பதிவு செய்து கொள்ளலாம். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கைக்கு பிறகு, உரியவருக்கு வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை வழங்கப்படும்.
மேலும், வாக்காளர் பதிவு அதிகாரி அலுவலகத்தில் படிவம் 6-ஐ சமர்ப்பித்து விண்ணப்பிக்கலாம். இணையம் மூலமாக https.//voters.eci.gov.in/ என்ற வலைதளத்திலும் விண்ணப்பிக்கலாம். கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து “Voter Helpline App” செயலியை தரவிறக்கம் செய்து அதன்மூலம் விண்ணப்பிக்கலாம். வாக்காளர் பட்டியலின் மென் நகலினை (புகைப்படமின்றி) வாக்காளர் பதிவு அலுவலரிடம் இருந்து ஒரு சட்டமன்ற தொகுதிக்கு ரூ.100 வீதம் கட்டணம் செலுத்தி பெறலாம் என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், தமிழகம் முழுவதும் வாக்குச்சாவடி அலுவலர்கள் நேற்று (21ம் தேதி) முதல் வீடு வீடாக சென்று வாக்காளர் பட்டியலை சரி பார்க்கும் பணியை துவக்கி உள்ளதாக தமிழக தலைமை அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்தார். அப்போது, ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் வாக்காளர் பெயர் இடம்பெற்றிருந்தால், சம்பந்தப்பட்ட வாக்காளர் ஒப்புதல் பெற்ற பிறகு அவரது பெயரை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும். தன்னிச்சையாக நீக்க கூடாது என இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் வாக்காளர் பெயர் இடம்பெற்றிருந்தால், சம்பந்தப்பட்ட வாக்காளர் ஒப்புதல் பெற்ற பிறகு அவரது பெயரை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும். தன்னிச்சையாக நீக்க கூடாது.
The post தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணி தொடங்கியது: தலைமை தேர்தல் அதிகாரி தகவல் appeared first on Dinakaran.