×

தமிழகத்தில் 19 இடங்களில் ரூ.950 கோடியில் மாவட்ட மருத்துவமனைகள்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

சென்னை: சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் உள்ள தடுப்பூசி கிடங்கில் கோவிட் மற்றும் குழந்தைகளுக்கான அட்டவணை தடுப்பூசிகளின் இருப்பு குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று ஆய்வு செய்தார். அப்போது மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்  இருந்தார். பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் 12 வகையான நோய்களை தடுக்க 11 வகையான தடுப்பூசிகள் குழந்தைககள் மற்றும் பெண்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. 9.42 லட்சம் குழந்தைகள் மற்றும் 10.43 லட்சம் பெண்களுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட வேண்டியுள்ளது. தமிழகத்தில் 5 கோடியே 68 லட்சம் பேருக்கு கோவிட் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 44 லட்சம் கோவிட் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளது. வரும் சனிக்கிழமை 7வது மெகா தடுப்பூசி முகாம் 50 ஆயிரம் மையங்களில் நடத்தப்படும். வார நாட்களிலும் தடுப்பூசி போடும் பணிகள் சிறப்பாக நடந்து வருகிறது. ரூ.950 கோடி நிதி: நாளை (இன்று) காலை நானும் துறையின் செயலாளரும் டெல்லிக்கு செல்கிறோம். இந்தியாவிலே தடுப்பூசிகள் போடும் பணி 100 கோடியை எட்டியுள்ள நிலையில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிக்க ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள செல்கிறோம். தமிழகத்தில் 11 புதிய மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளிலும் முழு மாணவர் சேர்க்கைக்கு அனுமதி வழங்கக்கோரி ஒன்றிய சுகாதார துறை அமைச்சரிடம் கோரிக்கை வைக்கப்படும். தற்போது வரை 850 மாணவர் சேர்க்கைக்கு தான் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மொத்தம் 1650 மாணவர்களை அனுமதிக்கலாம். மீதமுள்ள 800 மாணவர் சேர்க்கைக்கு அனுமதி வழங்க கோரிக்கை வைக்கப்படும். ஒன்றிய ஆய்வு குழுவினர் 4 மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் காணொலி வாயிலாக பார்த்து குறைகள் சரி செய்யப்பட்டிருப்பதை உறுதி செய்துள்ளார்கள்.  மேலும், தமிழகத்தில் 19 இடங்களில் மாவட்ட அரசு மருத்துவமனைகள் அமைக்க வேண்டி உள்ளது. அதற்குரூ.950 கோடி நிதி வேண்டும். அது குறித்தும் நாளை கோரிக்கை வைக்கப்படும். முன்கள மருத்துவ பணியாளர்களுக்கு அறிவிக்கப்பட்ட ஊக்கத் தொகை அடுத்த வாரம் வழங்கப்படும்….

The post தமிழகத்தில் 19 இடங்களில் ரூ.950 கோடியில் மாவட்ட மருத்துவமனைகள்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி appeared first on Dinakaran.

Tags : District Hospitals ,Tamil Nadu ,Minister ,Ma. Subharamanyan ,Chennai ,Ma ,
× RELATED தமிழ்நாடு காவல்துறையின் ஃபேஸ்...