×

சத்தியமங்கலம் அருகே தண்ணீர் இல்லாத கிணற்றில் விழுந்த சிறுத்தையை மீட்கும் முயற்சியில் வனத்துறையினர்

ஈரோடு: சத்தியமங்கலம் அருகே தண்ணீர் இல்லாத கிணற்றில் விழுந்த சிறுத்தையை மீட்கும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். சத்தியமங்கலம் புலிகளின் காப்பகத்திற்குட்பட்ட பகுதிகளில் சிறுத்த, யானை, புலி உள்ளிட்ட ஏராளமான வன விலங்குகள் வசித்து வருகின்றன.

இதில் நேற்று இரவு சத்தியமங்கலம் பகுதியில் உள்ள ரமேஷ் மற்றும் ரவி ஆகியோருக்கு சொந்தமான விவசாய தோட்டத்தில் உள்ள தண்ணீர் இல்லாத கிணற்றில் சிறுத்தை விழுந்துள்ளது.இந்நிலையில் அப்பகுதியில் இன்று காலை விவசாய வேலைக்கு சென்றவர்கள் சிறுத்தையின் உறுமல் சத்தம் கேட்டு கிணற்றில் பார்த்தபோது அதில் சிறுத்தை இருந்துள்ளது.

இதையடுத்து வனத்துறையினர் மற்றும் தீயணைப்புத்துறையினருக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர்.பின்னர் கிணற்றிலிருந்து சிறுத்தையை மீட்கும் பணி நடைபெற்றது. தீயணைப்புத்துறையினர், சிறுத்தை கிணற்றிலிருந்து மேலேற படிக்கட்டுகளை உள்ளே இறக்கினர். அப்போது சிறுத்தை தீயணைப்புத்துறையினரை ஆக்ரோஷமாக தக்க முற்பட்டது.

பின்னர் கூண்டு தயார் செய்யப்பட்டு அதில் கோழியின் இறைச்சியை வைத்து சிறுத்தையை பிடிக்க பணியில் வனத்துறையினர் ஈடுபட்டனர் அதிலும் சிறுத்தை பிடிபடாததால் மயக்க ஊசி செலுத்தி பிடிக்க முடிவு செய்துள்ளனர். சுமார் 18 மணி நேரமாக கிணற்றிலிருந்து சிறுத்தையை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் சிறுத்தை கிணற்றில் விழுந்தது குறித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

The post சத்தியமங்கலம் அருகே தண்ணீர் இல்லாத கிணற்றில் விழுந்த சிறுத்தையை மீட்கும் முயற்சியில் வனத்துறையினர் appeared first on Dinakaran.

Tags : sathyamangalam ,Erode ,Satyamangalam ,Sathamangalam ,Dinakaran ,
× RELATED தாளவாடி அருகே மாங்காய்களை பறிக்க...