×

ஹூண்டாய் எக்ஸ்டர்

ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம், துவக்க நிலை எஸ்யுவி மாடலாக, ஹூண்டாய் எக்ஸ்ட்டர் காரை அறிமுகம் செய்துள்ளது. துடிப்பான வெளிப்புறத்தோற்றம், அதிக இடவசதியுடன் சொகுசான இன்டீரியர்கள், நவீன தொழில்நுட்ப அம்சங்கள், சுற்றுசூழலுக்கு உகந்த, பாதுகாப்பான வாகனமாக இது அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. புரோஜெக்டர் ஹெட்லாம்ப்கள், ஸ்போர்ட்டியான ஸ்கிட் பிளேட்கள், டயமண்ட் கட் அலாய் வீல்கள், டிரைவர் சீட்டை தேவைக்கேற்ப உயர்த்திக் கொள்ளும் வசதி,குரல் மூலம் கட்டுப்படுத்தக் கூடிய சன்ரூப், டூயல் கேமரா கொண்ட டேஷ் கேமரா, சி டைப் யுஎஸ்பி மற்றும் வயர்லெஸ் சார்ஜர், 10.47 செ.மீ மேம்படுத்தப்பட்ட டிஜிட்டல் கிளஸ்டர், கதவு லாக்கை திறப்பது, மூடுவது, ஏசி, பேன் இயக்குவது, நிறுத்துவது, கார் நிற்கும் இடத்தை அறிந்து கொள்வது போன்ற ரிமோட் சேவைகள் என இந்த பிரிவின் முதலாவது மற்றும் நவீன வசதிகள் இதில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

மூன்று விதமான இன்ஜின் தேர்வுகளில் கிடைக்கும். இஎக்ஸ், எஸ், எஸ்எக்ஸ், எஸ்எக்ஸ் (ஓ) மற்றும் எஸ்எக்ஸ் (ஓ) கனெக்ட் என 5 வேரிண்ட்கள் உள்ளன. துவக்க ஷோரூம் விலையாக 1.2 லிட்டர் கப்பா பெட்ரோல், 4 சிலிண்டர் இன்ஜின் கொண்ட இஎக்ஸ் மேனுவல் வேரியண்ட்டுக்கு சுமார் ரூ.5.99 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் டாப் வேரியண்ட்டான எஸ்எக்ஸ் (ஓ) கனெக்ட் ஷோரூம் விலை சுமார் ரூ.9,31,990. இதே இன்ஜினின் ஏஎம்டி எஸ் வேரியண்ட் துவக்க ஷோரூம் விலையாக சுமார் ரூ.7,96,980 எனவும், டாப் வேரியண்ட்டான எஸ்எக்ஸ் (ஓ) கனெக்ட் ரூ.9,99,990 எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த இன்ஜின்கள் அதிகபட்சமாக 83 பிஎஸ் பவரையும், 113.8 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். இதுபோல் 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் சிஎன்ஜியில் இயங்கக்கூடிய இன்ஜின் கொண்ட காரில் எஸ் மற்றும் எஸ்எக்ஸ் என்ற 2 வேரியண்ட்கள் மட்டும் உள்ளன. துவக்க ஷோரூம் விலையாக சுமார் ரூ.8,23,990 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

The post ஹூண்டாய் எக்ஸ்டர் appeared first on Dinakaran.

Tags : Hyundai ,Hyundai Motor India ,Dinakaran ,
× RELATED ஹூண்டாய் மோட்டார் இந்திய தொழிற்சாலையில் 53வது தேசிய பாதுகாப்பு தினவிழா