×

மணிப்பூர் கொடூரம்: கனிமொழி எம்.பி. தலைமையில் வரும் 23ம் தேதி சென்னையில் ஆர்ப்பாட்டம்

சென்னை: மணிப்பூரில் பழங்குடி பெண்களுக்கு இழைக்கப்பட்ட, அநீதியைக் கண்டித்து திமுக எம்.பி கனிமொழி தலைமையில் சென்னையில் ஜூலை 23ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக திமுக வெளியிட்டுள்ள அறிக்கையில்; பா.ஜ.க. ஆட்சி நடத்தும் மணிப்பூர் மாநிலத்தில் மிகப்பெரிய கலவரம் ஏற்பட்டு பல உயிர்கள் பலியாகின. மாநிலத்தை ஆளும் பா.ஜ.க. அரசு கலவரத்தைக் கட்டுப்படுத்த தவறிய நிலையில், சமீபத்தில் பெண்கள் இருவர் நிர்வாணப்படுத்தப்பட்டு வீதியில் ஊர்வலமாக இழுத்துச் சென்று கற்பழிக்கப்பட்ட, மனிதாபிமானமற்ற கொடுமை நிகழ்ந்ததாக, ஊடகச் செய்திகள் தற்போது வெளிவந்துள்ளது. அனைவரின் உள்ளத்தையும் பதற வைத்துள்ளது.

தாய்மையை அவமானப்படுத்தும் இந்நிகழ்வுகளை மணிப்பூர் மாநில பா.ஜ.க. அரசு தடுக்கத் தவறி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த்து. இக்கலவரங்கள் நிகழ்ந்த நேரத்தில் அதனைத் தடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் பிரதமர் மோடி வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டு வந்தார். ஒன்றிய பா.ஜ.க. அரசும் மகளிருக்கெதிரான இக்கொடுமைகளைத் தடுக்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தவறியது. மணிப்பூர் கலவரம் தொடங்கிய நேரத்திலேயே தமிழ்நாடு முதலமைச்சர், தனது கண்டனத்தையும், கவலையையும் சமூக ஊடக வாயிலாக வெளிப்படுத்தினார்.

இச்சூழ்நிலையில் பெண்களுக்கு எதிரான நெஞ்சைப் பதற் வைக்கும் இக்கொடுமையைக் கண்டித்து, வரும் 23ம் தேதி அன்று சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே மாலை 4 மணியளவில் திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி, எம்.பி. தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். தொடர்ச்சியாக 24ம் தேதி திங்கட்கிழமை காலை 10.00 மணியளவில் தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் மகளிர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும். மாவட்டக் கழகச் செயலாளர்கள், மகளிர் அணி அமைப்பாளர்கள் இணைந்து இந்த ஆர்ப்பாட்டங்களை சிறப்பாக நடத்திடக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

The post மணிப்பூர் கொடூரம்: கனிமொழி எம்.பி. தலைமையில் வரும் 23ம் தேதி சென்னையில் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Manipur Kodoram ,KINANILANGUANKA MT GP ,chennai ,Dishaghagam ,Manipur ,B Kanilingali ,Kanipur Tamil GP ,
× RELATED சென்னை மெரினா கடற்கரை வருவோருக்கு நேரக் கட்டுப்பாட்டு?