×

விஜிபி உலக தமிழ் சங்க 30ம் ஆண்டு விழா

சென்னை: கடந்த 1993ம் ஆண்டு விஜிபி உலக தமிழ் சங்கம் துவங்கப்பட்டு, 30 ஆண்டு காலமாக தமிழ் பணியாற்றி வருகிறது. உலகமெங்கும் திருக்குறள் கொள்கைகளை பரப்புவதை விஜிபி உலக தமிழ் சங்கம் நோக்கமாக கொண்டிருக்கிறது. இந்நிலையில், விஜிபி உலக தமிழ் சங்கத்தின் 30ம் ஆண்டு விழா நாளை (22ம் தேதி) சென்னை அடையாறு, டாக்டர் எம்.ஜி.ஆர்.ஜானகி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி கலையரங்கத்தில் நடைபெறுகிறது. இதில், விஜிபி உலக தமிழ் சங்கத்தின் 30ம் ஆண்டு விழா மலர் மற்றும் நூல்கள் வெளியீடு, தமிழறிஞர்களுக்கு 30 இலக்கிய விருது வழங்குதல் மற்றும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

இந்நிகழ்ச்சியில் தமிழக சட்டப்பேரவை தலைவர் மு.அப்பாவு பங்கேற்று, விஜிபி.ராஜாதாஸ் எழுதிய ‘என் தந்தையாரின் அறிவு சிந்தனைகள்’ நூலை வெளியிட்டு சிறப்புரையாற்றுகிறார். அமைச்சர் மஸ்தான் பங்கேற்று, ‘சிலம்பு எனும் இசை நாட்டிய களஞ்சியம்’ நூலை வெளியிட்டு பேசுகிறார். தமிழறிஞர் முத்துக்குமாரசாமி எழுதிய ‘வ.உ.சிதம்பரனார்’ நூலை விஐடி வேந்தர் கோ.விசுவநாதன் வெளியிட்டு சிறப்புரையாற்றுகிறார். இதில் சிறுபான்மையினர் ஆணையத் தலைவர் எஸ்.பீட்டர் அல்போன்ஸ் நூல்களைப் பெற்று பேசுகிறார். இதில் நீதியரசர் டி.என்.வள்ளிநாயகம், முனைவர் அவ்வை ந.அருள், நாஞ்சில் பிற்றர், மல்லை சி.இ.சத்யா ஆகியோர் வாழ்த்துரை வழங்குகின்றனர். இந்நிகழ்ச்சிகளை முனைவர் உலகநாயகி பழனி தொகுத்து வழங்குகிறார்.

The post விஜிபி உலக தமிழ் சங்க 30ம் ஆண்டு விழா appeared first on Dinakaran.

Tags : VGP World Tamil Association ,30th Anniversary Celebration ,Chennai ,Tamil ,Dinakaran ,
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...