×

மின்வாரிய அலுவலகம் முற்றுகை மாதர்பாக்கத்தில் அடிக்கடி மின்தடை

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அடுத்த மாதர்பாக்கத்தில் உள்ள துணை மின் நிலையத்தில் இருந்து மாதர்பாக்கம், ராமசந்திராபுரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு மின்விநியோகம் செய்யப்படுகிறது. இதனிடையே, கிராம பகுதிகளில் இரவு-பகல் நேரங்களில் அடிக்கடி பல மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டினர். இந்த நிலையில் நேற்று மின்வாரிய அலுவலகத்தில் மாதாந்திர பராமரிப்பு என கூறி காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படும் என தெரிவித்தனர்.

ஆனால் 14 மணி நேரத்தை கடந்தும் மின்விநியோகம் வழங்கப்படவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட மக்கள், மாதர்பாக்கம் மின்பகிர்மான பிரிவு அலுவலகத்தை முற்றுகையிட்டு, ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மின்வாரிய ஊழியர்கள் மின்சார துண்டிப்பை சரிசெய்ய தாமதம் ஏற்பட்டதால், திடீரென மாதர்பாக்கம் நெடுஞ்சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். பாதிரிவேடு காவல்நிலைய போலீசார், பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தி, மின்வாரிய அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையடுத்து மறியலை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.

The post மின்வாரிய அலுவலகம் முற்றுகை மாதர்பாக்கத்தில் அடிக்கடி மின்தடை appeared first on Dinakaran.

Tags : Board ,Matarpak ,Kummidipoondi ,Matherpakkam ,Ramachandrapuram ,
× RELATED சென்னையில் அக்டோபர் மாதம் வரை எவ்வித...