×

ஒரு மாதத்துக்குள் நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பதாக உறுதி வீடு வீடாக சென்று பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்த எம்எல்ஏ

சித்தூர் : சித்தூர் எம்எல்ஏ ஜங்காளப்பள்ளி சீனிவாசலு வீடு வீடாக சென்று பொது மக்களிடையே குறைகளை கேட்டறிந்தார்.சித்தூர் 45 வது வார்டு மங்கசமுத்திரம் பகுதியில் சித்தூர் எம்எல்ஏ ஜங்காளப்பள்ளி சீனிவாசலு வீடு வீடாக சென்று பொதுமக்களிடையே குறைகளை கேட்டறிந்தார். பின்னர் அவர் கூறியதாவது:ஆந்திர மாநில முதல்வர் ஜெகன்மோகன் மாநிலம் முழுவதும் உள்ள எம்எல்ஏக்கள் அனைவரும் அவர்களின் தொகுதிக்கு சென்று பொதுமக்களிடையே குறைகளை கேட்டு அறிந்து தீர்த்து வைக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்தார். அதன்படி சித்தூர் சட்டமன்றத்தொகுதி முழுவதும் ஒவ்வொரு வீடாக சென்று பொது மக்களிடையே குறைகளை கேட்டறிந்து வருகிறேன்.

முதல்வர் ஜெகன்மோகன் பதவியேற்ற இந்த 4 ஆண்டுகளில் ஆந்திர மாநில மக்களுக்கு செய்த நலத்திட்ட உதவிகளை வீடு வீடாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறேன். இதில் ஏராளமான பொதுமக்கள் தங்கள் பகுதியில் குடிநீர் வசதி ஏற்படுத்தி தர வேண்டும், கூடுதலாக ஆழ்துளை கிணறு அமைக்க வேண்டும், சிமெண்ட் சாலை வசதி ஏற்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தனர்.

உடனடியாக அப்பகுதியில் வார்டு செயலாளர், அதிகாரிகளை வரவழைத்து பொதுமக்களின் கோரிக்கைகளை தீர்த்து வைக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளேன். அதேபோல் ஏராளமான பொதுமக்கள் இலவச வீட்டு மனை பட்டா, ரேஷன் கார்டு, முதியோர் உதவித்தொகை வேண்டும் எனவும் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.

அந்த மனுக்களின் மீது உரிய விசாரணை நடத்தி ஓரிரு வாரத்திற்குள் நடவடிக்கை எடுப்பதாக மனுதாரர்களுக்கு உறுதியளித்துள்ளேன். சித்தூர் 45 வது வார்டு மங்கா சமுத்திரம் பகுதி சேர்ந்த பொதுமக்களுக்கு தெரிவித்த அனைத்து வாக்குறுதிகளையும் ஓரிரு மாதத்திற்குள் நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பேன். இவ்வாறு அவர் பேசினார். இதில் முதல்வர் ஜெகன்மோகன் 4 ஆண்டு சாதனைகள் குறித்து துண்டுபிரச்சுரங்களை பொது மக்களுக்கு வழங்கி தங்கள் ஆட்சியின் சாதனைகளை விளக்கி கூறினார்.

The post ஒரு மாதத்துக்குள் நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பதாக உறுதி வீடு வீடாக சென்று பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்த எம்எல்ஏ appeared first on Dinakaran.

Tags : MLA ,Chittoor ,Jangalapalli Srinivasalu ,
× RELATED சித்தூர் மாவட்டத்தில் மணல் கடத்தலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்