×

நெரூர் சுற்று வட்டாரத்தில் கோரை சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்

கரூர் : கரூர் மாவட்டம் நெரூர் மற்றும் அதனைச் சுற்றிலும் உள்ள பகுதிகளில் கோரை சாகுபடி அதிகளவு நடைபெற்று வருகிறது. இதனை விவசாயிகள் ஆர்வத்துடன் பயிரிட்டு வருகின்றனர்.கரூர் மாவட்டத்தில் காவிரி மற்றும் அமராவதி ஆறு என இரண்டு ஆறுகள் பயணிக்கிறது. இதில், காவிரி ஆற்றங்கரையோர பகுதியில் நெல் போன்ற பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டாலும், நெரூர், திருமுக்கூடலூர், சோமூர், ரெங்கநாதன்பேட்டை போன்ற பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் கோரை பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

ஆண்டுக்கு இரண்டு முறை கோரை பயிர் சாகுபடி செய்யப்பட்டு, அறுவடை செய்து, வெளி மாநிலங்கள் மற்றும் தமிழகத்தின் பிற மாவட்ட பகுதிகளுக்கு ஏஜெண்ட்டுகள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பாய் உற்பத்தி மற்றும் பிற மாநிலங்களில் கான்கிரீட் போன்ற பணிகளுக்கு கோரை பயிர்கள் அதிகளவு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதன் முக்கியத்தும் அதிகம் என்பதால் தற்போதைய நிலையில், ஏராளமானோர் கோரையை வாங்கிச் செல்கின்றனர்.

காவிரி ஆற்றங்கரையோரம் அதிகளவு சாகுபடி செய்யப்பட்டு வரும் இந்த கோரைப் பயிர்கள், இரண்டு முறை சாகுபடி செய்யப்பட்டு, காய வைத்து, கட்டுக்களாக கட்டி, பின்னர் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆரம்ப காலத்தில் இந்த பயிருக்கு ஓரளவு லாபம் கிடைத்து வந்தது. இந்நிலையில், தற்போது இந்த பயிரில் லாபம் இல்லாத நிலையிலும், பல ஆண்டுகளாக இந்த பயிரை சாகுபடி செய்து வரும் விவசாயிகள் இன்றைக்கும் மனம் தளராமல் இதனை விளைவித்து வருகின்றனர்.

அந்த வகையில், காவிரி ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் கரூர் மாவட்டம் நெரூர் பகுதியை சுற்றிலும் கோரை பயிர் சாகுபடி செய்யப்பட்டு, இதனை விளைவிக்கும் பணியில் விவசாயிகள் ஆர்வத்துடன் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

The post நெரூர் சுற்று வட்டாரத்தில் கோரை சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் appeared first on Dinakaran.

Tags : Nerur Circuit ,Karur ,Nerur ,Dinakaran ,
× RELATED வானில் ஒரு வர்ணஜாலம் நெரூர்-உன்னியூர்...