×

மலை கிராமத்தில் சாலை வசதி இல்லாததால் டோலியில் நோயாளியை மருத்துவமனைக்கு தூக்கி செல்லும் மக்கள்

*தெலங்கானாவில் அவலம்

திருமலை : 3தெலங்கான மாநிலத்தில் மலை கிராமத்தில் சாலை வசதி இல்லாததால் நோயாளியை டோலி கட்டி மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லும் அவல நிலையை போக்க சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தெலங்கானா மாநிலம், போடாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட சீதாராம்புரம் கிராமத்தில் மர்ம நோய் பரவி வருகிறது. இதனால் அப்பகுதி மக்கள் வாந்தி, மயக்கம் சோர்வால் பாதிக்கப்படுகின்றனர்.

இந்நிலையில் அப்பகுதியை சேர்ந்த குரசம் பாபுராவ் என்பவருக்கு திடீெரன வாந்தி, பேதி ஏற்பட்டதால் மருத்துவமனைக்குச் செல்ல முடியாமல் இறந்ததாக கூறப்படுகிறது. மேலும் அதே ஊரை சேர்ந்த லட்சுமையா வாந்தி, பேதியால் அவதிப்பட்டு வந்தார். லட்சுமையாவை அவசர சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. ஆனால், போதிய வசதி இல்லாததால் கிராம மக்கள் ஒரு கட்டையில் போர்வைக்கு மத்தியில் லட்சுமையாவை படுக்க வைத்து டோலி கட்டி பலர் சுமந்தபடி ஓடையை கடந்து சென்று மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

சீதாராமபுரத்தில் பெய்த கடும் மழையால் ஓடையில் வெள்ளநீர் ஆர்ப்பரித்து செல்கிறது. எனவே இதுகுறித்து துறைசார்ந்த அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு இப்பகுதிக்கு சாலை மற்றும் அடிப்படை வசதிகள் செய்து தரவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post மலை கிராமத்தில் சாலை வசதி இல்லாததால் டோலியில் நோயாளியை மருத்துவமனைக்கு தூக்கி செல்லும் மக்கள் appeared first on Dinakaran.

Tags : Alam Thirumalai ,Telangana ,
× RELATED பெட்ரோல் பங்கிற்கு டீசல் பிடிக்க வந்த...