×

ஸ்டாப்பில் நிறுத்தாமல் சென்றதால் 3 பஸ்களை சிறை பிடித்து மாணவர்கள் போராட்டம்

*சூளகிரி அருகே பரபரப்பு

சூளகிரி : சூளகிரி அருகே, பஸ் ஸ்டாப்பில் நிறுத்தாமல் சென்ற 3 பஸ்களை சிறை பிடித்து, மாணவர்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி பகுதியில் செயல்பட்டு வரும் அரசு மேல்நிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளிகளில் சூளகிரி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இவர்களில் பலர் தினமும் டவுன் பஸ்சில் பள்ளிகளுக்கு சென்று வருகின்றனர். நேற்று காலை, கொடிதும்மனப்பள்ளியில் இருந்து செம்பரசனப்பள்ளி வழியாக, சூளகிரிக்கு அரசு டவுன் பஸ் சென்று கொண்டிருந்தது.

அப்போது செம்பரசனப்பள்ளி பஸ் ஸ்டாப்பில், டிரைவர் பஸ்சை நிறுத்தவில்லை. இதனால் அங்கு பஸ்சுக்காக காத்திருந்த பள்ளி மாணவர்கள், ஓடிச் சென்று அந்த பஸ்சை சிறைபிடித்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த கிராம மக்கள் மற்றும் மாணவர்கள், பஸ்சை ஏன் நிறுத்தவில்லை என கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர், அவ்வழியாக சூளகிரிக்கு சென்ற மேலும் 2 அரசு டவுன் பஸ்களையும் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த போக்குவரத்து கோட்ட மேலாளர் தமிழரசன் மற்றும் சூளகிரி போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்று, விசாரணை நடத்தினர். அப்போது, ஸ்டாப்பில் முறையாக பஸ்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதனால் சமாதானமடைந்த மாணவர்கள் மற்றும் மக்கள், கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் அந்த பகுதியில் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

The post ஸ்டாப்பில் நிறுத்தாமல் சென்றதால் 3 பஸ்களை சிறை பிடித்து மாணவர்கள் போராட்டம் appeared first on Dinakaran.

Tags : Chulagiri Chulagiri ,Chulagiri ,Dinakaran ,
× RELATED இணைப்புப் பாலமாக செயல்படும்...