×

போட் தொழிற் பயிற்சி மையத்தில் கிளர்க், ஸ்டெனோகிராபர்

சென்னையிலுள்ள போட் தொழிற் பயிற்சி மையத்தில் கிளர்க், ஸ்டனோகிராபர் பணிகளுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள் விவரம்:

1. Stenographer: 1 இடம் (பொது). சம்பளம்: ரூ.25,500. வயது: 30க்குள். தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 40 வார்த்தைகள் டைப்பிங் செய்யவும், நிமிடத்திற்கு 100 வார்த்தைகள் சுருக்கெழுத்தில் எழுதவும் தெரிந்திருக்க வேண்டும்.
2. Lower Division Clerk/Junior Assistant: 9 இடங்கள் (பொது-4, ஒபிசி-2, பொருளாதார பிற்பட்டோர்-2, எஸ்டி-1). சம்பளம்: ரூ.19,900. வயது: 30க்குள். தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 30 வார்த்தைகள் டைப்பிங் செய்ய தெரிந்திருக்க வேண்டும்.
3. Multi Tasking Staff: 1 இடம் (பொது). சம்பளம்: ரூ.18,000. வயது: 25க்குள். தகுதி: 8ம் வகுப்பு தேர்ச்சி.
எழுத்துத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்்ந்தெடுக்கப்படுவர்.

கட்டணம்: பொது/ஒபிசி/ பொருளாதார பிற்பட்டோருக்கு ரூ.1000/-. எஸ்சி/எஸ்டியினருக்கு ரூ.500/-. இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.
www.boat-srp.com என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்:27.07.2023.

The post போட் தொழிற் பயிற்சி மையத்தில் கிளர்க், ஸ்டெனோகிராபர் appeared first on Dinakaran.

Tags : Bode Vocational Training Centre ,Bot Vocational Training Centre ,Chennai ,Bot Vocational Training Center ,Dinakaran ,
× RELATED சென்னை மெரினா கடற்கரை வருவோருக்கு நேரக் கட்டுப்பாட்டு?