×

வணிகவரி, பதிவுத்துறை சார்பில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடங்களை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!

சென்னை: வணிகவரி மற்றும் பதிவுத்துறை சார்பில் கட்டப்பட்ட புதிய கட்டிடங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் திறந்து வைத்தார். விருதுநகர் மற்றும் குடியாத்தத்தில் 9 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த வணிகவரி அலுவலகக் கட்டடங்கள், தேனியில் 3 கோடியே 51 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த பதிவுத்துறை அலுவலகக் கட்டடம், நாமக்கல் பதிவு மாவட்டத்தில் – சேந்தமங்கலம், கன்னியாகுமரி பதிவு மாவட்டத்தில் – பள்ளியாடி ஆகிய இடங்களில் 2 கோடியே 20 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள சார்பதிவாளர் அலுவலகக் கட்டடங்களை சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

மேலும், செங்கல்பட்டு, திருவள்ளூர், கடலூர், திருவாரூர், திருப்பூர், விருதுநகர் மற்றும் ஓசூர் ஆகிய 7 புதிய வணிகவரி நிர்வாகக் கோட்டங்கள், செங்கல்பட்டு, கடலூர், திருவாரூர், திருப்பூர், விருதுநகர் மற்றும் ஓசூர் ஆகிய 6 புதிய வணிகவரி நுண்ணறிவுக் கோட்டங்கள், செங்கல்பட்டு, திருவள்ளூர், தாம்பரம், ஆவடி, இராணிப்பேட்டை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, திருவாரூர், கிருஷ்ணகிரி, சேலம் – 11, திருப்பூர் – 111, தேனி மற்றும் தென்காசி ஆகிய 13 புதிய வணிகவரி மாவட்டங்கள், தாம்பரம் மற்றும் கோயம்புத்தூர் (தெற்கு) ஆகிய 2 புதிய பதிவு மாவட்டங்களையும் காணொலி காட்சி மூலமாக முதலமைச்சர் திறந்து வைத்தார்.

The post வணிகவரி, பதிவுத்துறை சார்பில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடங்களை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!! appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Commercial Tax and Registry Department ,G.K. Stalin ,Chennai ,Department of Commerce and Registry ,Virutunagar ,B.C. G.K. Stalin ,Dinakaran ,
× RELATED பாலியல் புகாரில் சிக்கிய பிரஜ்வல்...