×

பொது சிவில் சட்டம் தொடர்பாக சட்ட ஆணையம் எதற்காக கருத்து கேட்டது ? : ஒன்றிய அரசு விளக்கம்

டெல்லி : பொது சிவில் சட்டம் தொடர்பாக சட்ட ஆணையம் எதற்காக கருத்து கேட்டது என ராஜ்யசபாவில் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.இது குறித்து மதிமுக பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் நாடாளுமன்ற மாநிலங்கள் அவையில், பொது சிவில் சட்டம் குறித்து கேட்ட கேள்விகளுக்கு, 20 ஜூலை, 2023 வியாழன் அன்று ஒன்றிய சட்ட அமைச்சர் அர்ஜூன்ராம் மேக்வால் பதில் அளித்தார். அதன் விவரம் வருமாறு:-
(அ) சட்ட ஆணையம் அண்மையில் புதிய ஆலோசனை செயல்முறையைத் தொடங்கியுள்ளதா? பொது மற்றும் மத அமைப்புகளிடமிருந்து ஒரே மாதிரியான பொது சிவில் சட்டம் (UCC) பற்றிய கருத்துக்களைக் கேட்டதா?
(ஆ) அப்படியானால், அதன் விவரங்கள்என்ன?
(இ) பொது சிவில் சட்டம் சிறுபான்மை மக்களின் கருத்துக்கு எதிராக இருக்கும்போது, சட்ட ஆணையம் மறுபரிசீலனை செய்வதற்கான காரணம் என்ன?
(ஈ) அனைத்து அரசியல் கட்சிகளிடையே பரந்த ஒருமித்த கருத்து ஏற்படும் வரை பொது சிவில் சட்டம் கொண்டு வரப்படாது என்று சிறுபான்மை சமூகங்களுக்கு அரசாங்கம் உறுதியளிக்குமா? அபப்டியானால் அதன் விவரங்கள்…

சட்டம் மற்றும் நீதி அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் பதில்:

(அ முதல் ஈ வரை) இந்தியாவின் 21ஆவது சட்ட ஆணையம் 31.08.2018 அன்று “குடும்பச் சட்டத்தின் சீர்திருத்தம்” குறித்த ஆலோசனைக் கட்டுரையை வெளியிட்டது. ஆனால் அது எந்த அறிக்கையையும் சமர்ப்பிக்கவில்லை. மேற்கூறிய வெளியிடப்பட்ட தேதியிலிருந்து நான்கு ஆண்டுகளுக்கும் மேலாகி விட்டதால், பல்வேறு நீதிமன்றங்களின் உத்தரவுகளையும், அதன் முக்கியத்துவத்தையும் கருத்தில் கொண்டு, 22ஆவது சட்ட ஆணைம், 14.06.2023 அன்று மத அமைப்புகள் மற்றும் பொதுமக்களின் கருத்துகளையும், எண்ணங்களையும் பெற முடிவு செய்தது.” என்று குறிப்பிட்டுள்ளார்.

The post பொது சிவில் சட்டம் தொடர்பாக சட்ட ஆணையம் எதற்காக கருத்து கேட்டது ? : ஒன்றிய அரசு விளக்கம் appeared first on Dinakaran.

Tags : Legal Commission ,Union Government ,Delhi ,Law Commission ,Rajyasabha ,
× RELATED 2ஜி தீர்ப்பில் தெளிவு தேவை என்ற...