×

பெருந்துறையில் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ரூ.1.35 கோடிக்கு கொப்பரை ஏலம்

 

ஈரோடு, ஜூலை 21: பெருந்துறை வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் வாரந்தோறும் சனி மற்றும் புதன்கிழமைகளில் கொப்பரை ஏலம் நடைபெற்று வருகிறது. அதன்படி, நேற்றுமுன் தினம் நடைபெற்ற ஏலத்துக்கு மொத்தம் 3,583 மூட்டை கொப்பரைகள் கொண்டு வரப்பட்டன. இதில் முதல் தர கொப்பரைகள் 2,058 மூட்டைகள் வரப்பெற்றிருந்தன.

இவை குறைந்தபட்ச விலையாக கிலோ ரூ. 74.35க்கும், அதிகபட்சமாக ரூ. 81.59க்கும் விற்பனையாகின. இரண்டாம் தர கொப்பரைகள் 1,525 மூட்டைகள் கொண்டு வரப்பட்டிருந்தன. இவை குறைந்தபட்சமாக கிலோ ரூ.46.03க்கும், அதிகபட்சமாக ரூ. 76.29க்கும் விற்பனையாகின. மொத்தம் 1 லட்சத்து 74 ஆயிரம் கிலோ கொப்பரைகள் விற்பனையாகின. இவற்றின் மொத்த விற்பனை மதிப்பு ரூ.1 கோடியே 35 லட்சம் ஆகும் என விற்பனைக் கூட கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

The post பெருந்துறையில் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ரூ.1.35 கோடிக்கு கொப்பரை ஏலம் appeared first on Dinakaran.

Tags : Perundurai Co-operative Sales Society ,Erode ,Perundurai Agricultural Producers' Cooperative Sale Society ,
× RELATED தகிக்கும் கோடை வெயில் பறவைகளுக்கு...