×

சிறுவாணி அணை நீர்மட்டம் 13.5 அடி

 

கோவை, ஜூலை 21: கோவை மாநகருக்கு குடிநீர் வழங்கும் முக்கிய அணையாக சிறுவாணி அணை உள்ளது. இந்த அணை கேரள மாநிலம் பாலக்காட்டில் அமைந்துள்ளது. இந்த அணையில் இருந்து எடுக்கப்படும் குடிநீர் மாநகராட்சியில் உள்ள 30 வார்டு மக்களுக்கு வழங்கப்படுவதுடன், வழியோரங்களில் உள்ள ஏராளமான கிராமங்களுக்கும் வழங்கப்பட்டு வருகிறது. சிறுவாணி அணை 49.53 அடி உயரும் கொண்டது. ஆனால், கேரள அரசு 45 அடிக்கு மேல் நீர் தேக்கி வைக்க அனுமதிப்பது இல்லை. கடந்த மூன்று வருடங்களாக கேரள நீர்ப்பாசனத்துறை அணை பாதுகாப்பு காரணம் என்று கூறி சிறுவாணி அணை முழு கொள்ளளவு அடைய அனுமதிப்பதில்லை.

அதிலும், குறிப்பாக கடந்த ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் அணையிலிருந்து அதிகப்படியான நீரினை சிறுவாணி ஆற்றில் திறந்துவிட்டு அணையின் நீர் மட்டத்தை மிக கணிசமாக குறைத்துள்ளது.தற்போது மழை பெய்து வருவதால் அணையின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. இது குறித்து குடிநீர் வடிகால் வாரிய அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘சிறுவாணி அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. அணையின் நீர்மட்டம் 13.5 அடியாக உள்ளது. நாள் ஒன்றுக்கு 65 எம்எல்டி நீர் வரை குடிநீர் தேவைக்காக எடுக்கப்படுகிறது’’ என்றார்.

The post சிறுவாணி அணை நீர்மட்டம் 13.5 அடி appeared first on Dinakaran.

Tags : Siruvani Dam ,Coimbatore ,Dinakaran ,
× RELATED கோவை நீர் பிடிப்பு பகுதிகளில்...