×

மகளிர் கல்லூரியில் பிரெஞ்சு தேசிய விழா

 

மதுரை, ஜூலை 21: மதுரையில் உள்ள டோக் பெருமாட்டி மகளிர் கல்லூரியில் பிரெஞ்சு துறை சார்பில் பிரெஞ்சு தேசிய விழா கொண்டாடப்பட்டது. மாணவி எப்ஸிபா வரவேற்றார். துறைத்தலைவர் சான்டோ மிஷ்லின் சங்கீதா அறிமுக உரையாற்றினார். வரலாற்று துறையைச் சேர்ந்த உதவிப் பேராசிரியர் துர்காதேவி சிறப்பு விருந்தினராக கலந்து கலந்து கொண்டு பாஸ்ட்டில் தினம் மற்றும் பிரெஞ்சு புரட்சியைப் பற்றி எடுத்துரைத்தார்.

தொடர்ந்து மாணவிகளின் இசை மற்றும் நடன நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பிரெஞ்சு புரட்சி காலகட்டத்தில் வாழ்ந்த ராணி மரி அந்துவானத் மற்றும் ஜோன் ஆப் ஆர்க் போன்று வேடமணிந்த மாணவிகள், அவர்களை பற்றி விவரித்தனர். பிரெஞ்சு தேசம் மற்றும் புரட்சியை பற்றி நடந்த வினாடி வினா போட்டியில் மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்று பரிசுகள் பெற்றனர். மாணவி வர்ஷினி நன்றி கூறினார்.

The post மகளிர் கல்லூரியில் பிரெஞ்சு தேசிய விழா appeared first on Dinakaran.

Tags : French National Festival ,Women's ,College ,Madurai ,French national ,French ,Doc Perumati Women's College ,Dinakaran ,
× RELATED நாமக்கல் விவேகானந்தா மகளிர் பொறியியல் கல்லூரியை சுற்றி Drone-கள் பறக்க தடை