×

திருப்பூர் வடக்கு மாவட்ட திமுக மகளிர் அணி உறுப்பினர் சேர்க்கை முகாம்

 

திருப்பூர், ஜூலை 21: திமுக திருப்பூர் வடக்கு மாவட்டம், மகளிர் அணி மற்றும் மகளிர் தொண்டர் அணியின் புதிய உறுப்பினர் சேர்க்கை தொடர்பான நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் திருப்பூர் ராஜாராவ் வீதியில் உள்ள கட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது. வடக்கு மாவட்ட செயலாளர் செல்வராஜ் எம்எல்ஏ தலைமை வகித்தார்.

இக்கூட்டத்தில், வடக்கு மாநகர செயலாளர் மேயர் தினேஷ்குமார், நல்லூர் பகுதி செயலாளர் மேங்கோ பழனிசாமி, மாநில மகளிர் அணி பிரசார குழு செயலாளர் உமாமகேஸ்வரி, மாவட்ட துணை செயலாளர் நந்தினி, மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் கலைச்செல்வி, மாவட்ட மகளிர் தொண்டர் அணி அமைப்பாளர் ஆனந்தி, மாவட்ட, மாநகர மகளிர் அணி, மகளிர் தொண்டர் அணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

The post திருப்பூர் வடக்கு மாவட்ட திமுக மகளிர் அணி உறுப்பினர் சேர்க்கை முகாம் appeared first on Dinakaran.

Tags : Tirupur ,North District ,DMK Women Team Membership Camp ,DMK Tirupur North District ,Women's Team ,Women Volunteer Team ,North District DMK Women's Team Membership Camp ,Dinakaran ,
× RELATED அமைச்சர் முன்னிலையில் பாஜவினர் 100 பேர்...