×

கேரளாவிற்கு கடத்த முயன்ற 800 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

கம்பம், ஜூலை 21: தமிழக ரேஷன் கடைகளில் வழங்கப்படும் ரேஷன் அரிசி கேரளாவிற்கு சட்டவிரோதமாக கடத்தப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க மாவட்ட நிர்வாகம், குடிமை பொருள் பதுக்கல் தடுப்பு பிரிவு போலீசார் இணைந்து ெசயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில் உத்தமபாளையம் கோட்டாட்சியர் பால்பாண்டியன் தலைமையில் உத்தமபாளையம் வட்ட வழங்கல் அலுவலர் பாண்டி மற்றும் அதிகாரிகள் நேற்று அதிகாலை கம்பம்மெட்டு சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது சந்தேகத்திற்கிடமாக வந்த ஜீப்பை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அதில் 800 கிலோ ரேஷன் அரிசி 50 கிலோ மூட்டைகளாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து ஜீப்பை ஓட்டி வந்த கோம்பை காந்தி நகரைச் சேர்ந்த சுரேஷ் (39) என்பவரை கைது செய்து, பறிமுதல் செய்த ரேஷன் அரிசியை உத்தமபாளையம் நுகர்பொருள் வாணிபக் கழக கிட்டங்கியில் ஒப்படைத்தனர்.இது சம்பந்தமாக உத்தமபாளையம் புட்செல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

The post கேரளாவிற்கு கடத்த முயன்ற 800 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Kerala ,Kampam ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED ஹேமா கமிட்டியின் முழுமையான அறிக்கையை...