×

புதுக்கோட்டையில் சைபர் கிரைம் விழிப்புணர்வு பேரணி

 

புதுக்கோட்டை,ஜூலை21: நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சைபர் கிரைம் குற்றத்திலிருந்து பொதுமக்களை பாதுகாக்கும் வகையில் புதுக்கோட்டையில் சைபர் கிரைம் காவல்துறையினர் சார்பில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியில் 300க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகள் பங்கேற்று கைகளில் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி பேரணியாக சென்றனர். நாடு முழுவதும் சைபர் கிரைம் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த சைபர் கிரைம் குற்றங்களால் பணத்தை இழப்பதுடன் சிலர் தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்கு ஆளாகின்றனர். இந்நிலையில் சைபர் கிரைம் குற்றங்களை தடுக்க ஒருபுறம் போலீசார் நடவடிக்கை எடுத்து வந்தாலும் மற்றொருபுறம் இந்த குற்றங்கள் நடந்து தான் வருகிறது. இந்நிலையில் புதுக்கோட்டையில் சைபர் கிரைம் குற்றங்களிலிருந்து பொதுமக்களை பாதுகாக்கும் வகையில் மாவட்ட சைபர் கிரைம் காவல்துறையினர் சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. புதுக்கோட்டை கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கலைக்கல்லூரியில் தொடங்கிய இந்த விழிப்புணர்வு பேரணியை சைபர் கிரைம் ஏடிஎஸ்பி தேன்தமிழ்வளவன் தொடங்கி வைத்தார்.

மேலும் இந்த பேரணியில் நகர டிஎஸ்பி ராகவி, சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் கவிதா மற்றும் 300க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகள் பங்கேற்றனர். மேலும் இந்த பேரணியில் ஓடிபி எண்ணை யாரிடமும் தெரிவிக்க கூடாது, மொபைல் போனுக்கு தேவை இன்றி வரும் லிங்கை கிளிக் செய்யக் கூடாது. போலியாக ஆசைகளை தூண்டும் விதத்தில் வரக்கூடிய விளம்பரங்களை நம்பி ஏமாற வேண்டாம், இன்வெஸ்ட்மென்ட் என்று பெயரில் பணம் பறிக்கும் நபர்களை நம்பி ஏமாறாதீர்கள் உள்ளிட்ட பல்வேறு சைபர் கிரைம் குற்றங்களை எடுத்து கூறுகைகளில், விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி கல்லூரி மாணவிகள் இந்த பேரணியில் கலந்து கொண்டனர். இந்த பேரணி புதிய பேருந்து நிலையம் பழைய பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகள் வழியாக சென்று மீண்டும் கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கலைக்கல்லூரி வளாகத்தில் நிறைவடைந்தது.

The post புதுக்கோட்டையில் சைபர் கிரைம் விழிப்புணர்வு பேரணி appeared first on Dinakaran.

Tags : Cyber crime awareness rally ,Pudukottai ,Cybercrime awareness rally ,
× RELATED புதுக்கோட்டை அரசு பள்ளிகளில்...