×

ஆடிப்பட்டத்தில் விதைகள் வாங்க விவசாயிகளுக்கு அழைப்பு

 

குத்தாலம்,ஜூலை 21: மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை வட்டாரம் தோட்டக்கலை உதவி இயக்குநர் பொன்னி ஒரு செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: மயிலாடுதுறை மற்றும் குத்தாலம் வட்டாரத்திற்கு தோட்டக்கலைத்துறையின் மூலம் பின்வரும் திட்டங்களுக்கு நடப்பு ஆண்டிற்கு 2023-24 இலக்கு வழங்கப்பட்டுள்ளது. தேசிய வேளாண் வளர்ச்சி திட்டம் மற்றும் மாநில தோட்டக்கலை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு காய்கறி விதைகள், குழித்தட்டு நாற்றுகள் மற்றும் பழ கன்றுகளுக்கான இலக்கு பெறப்பட்டுள்ளது. மேலும் பிரதம மந்திரியின் விவசாயத்திற்கான நுண்ணீர் பாசனத்திட்டத்தில் சொட்டுநீர் மற்றும் தெளிப்புநீர் பாசன கருவிகள் 100 சதவிகிதம் மற்றும் 75 சதவிகிதம் மான்யத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இதற்கு தேவையான ஆவணங்கள் சிட்டா, அடங்கள் கணிணி சிட்டா. ஆதார் நகல், ரேசன் அட்டை நகல், நில வரைப்படம், சிறு குறு விவசாய சான்று, போட்டோ ஆகியவற்றுடன் தோட்டக்கலை அலுவலகத்தை அணுகலாம்.

கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் 2023-24 ஆம் ஆண்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட கிராமத்திற்கு பழச்செடி தொகுப்புகள் வழங்கப்பட உள்ளது. தேசிய முங்கில் இயக்கம் மற்றும் பனை மேம்பாட்டு இயக்கம் போன்ற திட்டங்கள் தோட்டக்கலை துறை சார்பாக செயல்படுத்தப்படுகிறது. மேற்கண்ட திட்டங்களில் பயன்பெற விவசாயிகள் www.tnhorticulture.in.gov.i/tnhortnet என்ற இணையதளம் வாயிலாக பதிவு செய்தால் முன்னுரிமை அடிப்படையில் பயனடையலாம். மேலும் பதிவு செய்ய இயலாத விவசாயிகள் நேரடியாக மயிலாடுதுறை மற்றும் குத்தாலம் வட்டாரங்களில் உள்ள தோட்டக்கலை அலுவலகத்தில் தங்களது ஆவணங்களை சமர்பித்து பதிவு செய்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

The post ஆடிப்பட்டத்தில் விதைகள் வாங்க விவசாயிகளுக்கு அழைப்பு appeared first on Dinakaran.

Tags : Adipattam ,Kutthalam ,Mayiladuthurai District ,Horticulture ,Assistant Director ,Ponni ,
× RELATED மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியில்...