×

டெல்லி அவசர சட்டத்துக்கு எதிரான வழக்கு அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றம்: உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: டெல்லி அரசு நிர்வாகம் தொடர்பாக பல்வேறு விவகாரங்களில் டெல்லி அரசுக்கும், துணைநிலை ஆளுநருக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது. இதுதொடர்பான வழக்கில் மாநில அரசுகளுக்கே அதிகாரம் உள்ளது என உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு எதிராக பாஜ அரசு அவசர சட்டத்தை கொண்டு வந்து, அதை தற்போது நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் நிறைவேற்றவும் முடிவு செய்துள்ளது.

இதனிடையே ஒன்றிய அரசின் அவசர சட்டத்துக்கு எதிராக டெல்லி அரசு தாக்கல் செய்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு, வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டனர்.

The post டெல்லி அவசர சட்டத்துக்கு எதிரான வழக்கு அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றம்: உச்ச நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,New Delhi ,Government of Delhi ,Deputy Governor ,Delhi Government Administration ,Dinakaran ,
× RELATED யூடியூபர் சங்கர் வழக்கு விவகாரம்;...