×

மணிப்பூர் நிர்வாண ஊர்வல வீடியோ மோடியை இந்தியா ஒருபோதும் மன்னிக்காது: காங்கிரஸ் தலைவர் கார்கே ஆவேசம்

புதுடெல்லி: மணிப்பூர் நிர்வாண ஊர்வல வீடியோ தொடர்பாக பிரதமர் மோடியை இந்தியா ஒருபோதும் மன்னிக்காது என்று காங்கிரஸ் தலைவர் கார்கே தெரிவித்தார். மணிப்பூரில் 2 பழங்குடியின பெண்கள் நிர்வாணமாக ஊர்வலமாக அழைத்துச்சென்று பலாத்காரம் செய்யப்பட்ட வீடியோ நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி உள்ளது. இதுபற்றி காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூறியிருப்பதாவது: மணிப்பூரில் மனிதநேயம் இறந்துவிட்டது. அங்கு ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும். அங்கு என்ன நடந்தது என்பது குறித்து நாடாளுமன்றத்தில் பேசி, பிரதமர் மோடி நாட்டுக்கு தெரிவிக்க வேண்டும். மோடி ஜி, உங்கள் மவுனத்தை இந்தியா ஒருபோதும் மன்னிக்காது. உங்கள் அரசில் மனசாட்சியோ அல்லது அவமானமோ எஞ்சியிருந்தால், மணிப்பூரைப் பற்றி நாடாளுமன்றத்தில் பேசி, உங்கள் இரட்டை இயலாமைக்கு மற்றவர்களைக் குறை கூறாமல் என்ன நடந்தது என்பதை நாட்டுக்கு மக்களுக்கு சொல்லுங்கள்.

இந்த நெருக்கடியான நேரத்தில், மணிப்பூர் மக்களுடன் நாங்கள் ஒன்றாக நிற்கிறோம், பிரதமருக்கு வெளிநாட்டு சுற்றுப்பயணங்களுக்கு செல்ல நேரம் உள்ளது, ஆனால் மணிப்பூருக்கு நேரம் இல்லை. பிரதமருக்கு ஹெலிகாப்டர் உட்பட அனைத்து வழிகளும் உள்ளன, ஆனால் மணிப்பூர் செல்லவில்லை. அதேசமயம், ராகுல் காந்தி அங்கு சென்று மக்களைக் கேட்கச் சென்றார். உங்களுக்கு அரசின் அனைத்து வசதிகளும் உள்ளன. நீங்கள் ஏன் அங்கு செல்லவில்லை?. இவ்வாறு அவர் கேள்வி எழுப்பினார். காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ்: மணிப்பூரில் இரண்டு பெண்களை நிர்வாணமாக ஊர்வலமாக அழைத்துச் சென்று, பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படும் கொடூரமான சம்பவம் நடந்து 77 நாட்களும் ஆகிறது. இது ஒன்றிய அரசுக்கோ, உள்துறை அமைச்சருக்கோ, பிரதமருக்கோ தெரியாமல் இருந்ததா? உங்கள் மவுனத்தைக் கலையுங்கள் பிரதமரே!”.

The post மணிப்பூர் நிர்வாண ஊர்வல வீடியோ மோடியை இந்தியா ஒருபோதும் மன்னிக்காது: காங்கிரஸ் தலைவர் கார்கே ஆவேசம் appeared first on Dinakaran.

Tags : India ,Modi ,Manipur ,Congress ,Kharge ,New Delhi ,PM Modi ,Kharke ,
× RELATED I.N.D.I.A. கூட்டணி மன்னிப்பு கேட்க வேண்டும்: பிரதமர் மோடி