×

திருத்தணியில் செல்போன் கடையில் சோதனை

 

திருத்தணி: திருத்தணியில் சுங்க மற்றும் மறைமுக வரிகள் அமலாக்கத்துறையினர் திடீரென செல்போன் கடையில் சோதனை நடத்தினர். திருத்தணி பேருந்து நிலையத்தில் செல்லும் சாலையில் காம்ப்ளக்ஸ் ஒன்று உள்ளது. இந்த காம்ப்ளக்ஸ் கட்டிட உரிமையாளரிடமிருந்து சின்னப்பா என்பவர் வாடகை எடுத்துள்ளார். இந்நிலையில், அந்த கடையில் ஏற்கனவே ஒரு செருப்பு கடை நடத்தப்பட்டு வந்தது. இதனைத் தொடர்ந்து, அந்த கடையை மாற்றப்பட்டு தற்போது செல்போன் கடையாக இயங்கி வருகிறது. இந்த செல்போன் கடையை ரசாக் என்பவர் நடத்தி வருகிறார்.

தற்போது, ரசாக் என்பவர் கட்டிட உரிமையாளரிடம் ஒப்பந்தம் போடாமல் வாடகைக்கு எடுத்த நபரிடமிருந்து ஒப்பந்தம் போட்டு ஜிஎஸ்டி பதிவு செய்துள்ளார். இந்த பதிவின் காரணமாக ஏற்கனவே, அதே கடையில் இரண்டு ஜிஎஸ்டி நம்பர் இருப்பதால் சந்தேகம் அடைந்த, சுங்கம் மற்றும் மறைமுக வரிகள் அமலாக்கத்துறை ஆய்வாளர் செந்தில் முகேஷ் தலைமையில் கண்காணிப்பாளர் பூபதி மற்றும் அதிகாரிகள் இணைந்து திடீரென நேற்று மாலை 5.30 மணி முதல் 7 மணி வரை செல்போன் கடையில் வந்து சோதனை நடத்திவிட்டு சென்றனர். இதனால் திருத்தணியில் ஒரு மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

The post திருத்தணியில் செல்போன் கடையில் சோதனை appeared first on Dinakaran.

Tags : Tiruthani ,Thiruthani ,Customs and Excise Enforcement Department ,Dinakaran ,
× RELATED திருத்தணி முருகன் கோயிலில் வாகன நெரிசல்: பக்தர்கள் அவதி