×

மாங்காடு காமாட்சியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.50.98 லட்சம்

குன்றத்தூர்: பூந்தமல்லி அடுத்த மாங்காடு காமாட்சி அம்மன் கோயில் உள்ளது. மிகவும் பிரசித்திபெற்ற இந்த கோயிலில் தினமும் சாமி தரிசனம் செய்ய தமிழகம் மட்டுமின்றி, அண்டை மாநிலங்களான ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர். அவ்வாறு வருகை தரும் பக்தர்கள் தங்களது வேண்டுதல்கள் நிறைவேறியதற்காக நேர்த்திக் கடன் காணிக்கைகளை கோயில் வளாகத்தில் உள்ள உண்டியலில் செலுத்துவது வழக்கம். அதில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தப்பட்ட காணிக்கைகளை உண்டியலில் இருந்து நேற்று திறக்கப்பட்டு காணிக்கைகள் எண்ணப்பட்டது.

காலை முதல் மாலை வரை உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. இதில், பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய 50 லட்சத்து 98 ஆயிரத்து 602 ரூபாய் பணமும், 415 கிராம் பொன் இனங்கள் மற்றும் 756 கிராம் வெள்ளி இனங்கள் காணிக்கையாக பெறப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. உண்டியல் திறப்பின்போது கோயில் பரம்பரை தர்மகர்த்தா மணலி சீனிவாசன், கோயில் துணை ஆணையர் கவெனிதா மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். உண்டியலில் காணிக்கை என்னும் பணி நடைபெற்றபோது, மாங்காடு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

The post மாங்காடு காமாட்சியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.50.98 லட்சம் appeared first on Dinakaran.

Tags : Mangadu Kamatshyamman temple ,Kunradthur ,Poontamalli ,Mangadu Kamatshi Amman Temple ,Mangadu Kamatsiyamman temple ,
× RELATED குன்றத்தூர் முருகன் கோயிலில் திருவிளக்கு பூஜை: திரளான பெண்கள் வழிபாடு