×

ஆவின் பால் குறித்து ஆலோசனை கொள்முதல் விலை அதிகரித்தால் பால்விலையும் உயர வாய்ப்பு: அமைச்சர் மனோதங்கராஜ் தகவல்

சென்னை: ‘‘விவசாயிகளுக்கு பால்கொள்முதல் விலையை உயர்த்தி கொடுத்தால் பால் விலையை உயர்த்தி தர வேண்டிய நிலை ஏற்படும் என்பதால் முதல்வரிடம் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்’’ என்று பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்தார். சென்னை நந்தனத்தில் உள்ள ஆவின் பால்வளத்துறை அலுவலகத்தில் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம் ஆய்வுக்கூட்டம் அமைச்சர் மனோ தங்கராஜ் தலைமையில் நேற்று நடைப்பெற்றது. அதை தொடர்ந்து நிருபர்களை சந்தித்த அமைச்சர் மனோ தங்கராஜ் கூறுகையில் : தமிழகத்தில் பால்வளத்துறையில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கையின் காரணத்தால் நாளொன்றுக்கு 4 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் அதிகமாகியுள்ளது. சென்னையில் தினமும் விற்கப்படும் பால் 50 ஆயிரம் லிட்டராக அதிகரித்துள்ளது. விவசாயிகளுக்கு வழங்கப்படும் பாலிற்கான தொகையை நிலுவையில் இல்லாமல் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் விவசாயிகளுக்கு பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்குவது சவாலாக உள்ளது. அவ்வாறாக விவசாயிகளுக்கு பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டுமென்றால் பால் விலையும் கணிசமாக உயர்த்த வேண்டிய சூழலும் ஏற்படும் என்பதால் முதலமைச்சரிடம் ஆலோசனை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

The post ஆவின் பால் குறித்து ஆலோசனை கொள்முதல் விலை அதிகரித்தால் பால்விலையும் உயர வாய்ப்பு: அமைச்சர் மனோதங்கராஜ் தகவல் appeared first on Dinakaran.

Tags : Minister ,Manodhankaraj ,CHENNAI ,Chief Minister ,
× RELATED மதத்தை தவிர பேசுவதற்கு பாஜகவினரிடம்...