
சென்னை: தேமுதிக தலைமை கழகம் நேற்று வெளியிட்ட அறிவிப்பு: தேமுதிக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் வரும் 24ம் தேதி காலை 10 மணியளவில், கோயம்பேட்டில் உள்ள தலைமை கழகத்தில் நடைபெற உள்ளது. மாவட்ட செயலாளர் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் கட்சியின் செயல்பாடு குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது. வர உள்ள நாடாளுமன்ற தேர்தல் குறித்தும், கூட்டணி தொடர்பாகவும் விவாதிக்கப்படும் என்று தெரிகிறது. அதே நேரத்தில் அண்மையில் பிரதமர் மோடி தலைமையில் கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் அதிமுக உள்ளிட்ட கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால், கூட்டணியில் உள்ள தேமுதிகவுக்கு பாஜ அழைப்பு விடுக்கவில்லை. இது தேமுதிகவுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று தெரிகிறது.
The post சென்னையில் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்: எம்பி தேர்தல் குறித்து ஆலோசனை appeared first on Dinakaran.