×

தொழில்துறை மேம்பாடு மற்றும் வளர்ச்சியில் தமிழ்நாடு முன்னிலை: துணைவேந்தர்கள் மாநாட்டில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு

சென்னை: தொழில்துறை மேம்பாடு மற்றும் வளர்ச்சியில் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்தார். சென்னை கிண்டியில் உள்ள ராஜ் பவனில் தனியார் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மாநாடு நேற்று நடைபெற்றது. இதில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்று தேசிய கல்விக்கொள்கை 2020 செயல்படுத்தும் நிலை குறித்து ஆய்வு மேற்கொண்டார். இந்த மாநாட்டில் தனியார் பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களை சேர்ந்த 20 துணை வேந்தர்கள் பங்கேற்றனர். இதில் தேசிய கல்விக்கொள்கையை செயல்படுத்துவதில் ஆர்வம் காட்டி வரும் தனியார் பல்கலைக்கழகங்களுக்கு நன்றி தெரிவித்து, அதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் திருப்தி அளிப்பதாக மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

இந்த மாநாட்டில் பேசிய ஆளுநர் கூறியதாவது: தேசிய கல்விக்கொள்கை 2020 என்பது ஏதோ ஒரு சாதாரன கல்விக்கொள்கை அல்ல, இது ஒரு புரட்சிகரமான, விரிவான கொள்கை. இளைஞர்களின் திறமை மற்றும் சாத்தியங்களை முழுஅளவில் அறிந்து உயர்கல்வியில் முழுமையான அணுகுமுறையை வழங்கும். இதன்மூலம் இந்தியா 2047க்குள் முழுமையாக வளர்ந்த தேசமாக விளங்கும். இன்றைய காலக்கட்டத்தின் சவால்களை எதிர்கொள்ள மாணவர்களுக்கு அண்மைகால தொழில்நுட்ப திறன், அறிவு உள்ளிட்டவை வழங்கப்பட வேண்டும். இது மாணவர்களுக்கு உலகத்தை ஆள தன்னம்பிக்கை மற்றும் திறன்களை அளிக்கும். மேலும் தமிழ்நாடு தொழில்துறையின் முன்னேற்றம் மற்றும் வளர்ச்சியில் முன்னிலையில் இருக்கிறது. மனித வளங்களின் திறன் மேம்பாட்டில் கவனம் செலுத்த வேண்டும். கல்வியாளர்கள் மற்றும் தொழிற்துறையினர் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.

கல்வி அறிவுக்கும், தொழில் திறனுக்கும் இடையே உள்ள இடைவெளியை குறைத்து வேலையின்மை மற்றும் பிற சவால்களை எதிர்கொள்ள வேண்டும். கல்வி நிறுவனங்கள் அவர்களிடம் உள்ள வளங்களை பயன்படுத்தி தொழில்நுட்ப பாடங்களை தமிழில் மொழிபெயர்க்க வேண்டும். இது தொழில்நுட்ப பாடப்பிரிவுகளில் சேர்க்கை விகிதத்தை அதிகரிக்கும். மாநில மொழிகளை ஊக்குவிப்பதில் தமிழை முதன்மையாக கொண்டுள்ளது. மேலும் விடுதலை போராட்டத்தில் தமிழர்களின் பங்களிப்பு அதிகம். தமிழக சுதந்திர போராட்ட வீரர்கள் பலர் போற்றப்பட்டாமல், அறியப்படாமல் உள்ளனர்.விருப்பமுள்ள மாணவர்களை பயன்படுத்தி அவர்களை கண்டறிந்து ஆய்வுகள் நடத்தி வருங்கால சந்ததியினர் அறிய ஆவணம் செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

The post தொழில்துறை மேம்பாடு மற்றும் வளர்ச்சியில் தமிழ்நாடு முன்னிலை: துணைவேந்தர்கள் மாநாட்டில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு appeared first on Dinakaran.

Tags : Tamil ,Nadu ,Governor RN Ravi ,Vice-Chancellors' Conference ,Chennai ,Governor RN ,Ravi ,Tamil Nadu ,Guindy… ,
× RELATED விடுதலைப் போராட்டத்தில்...