×

ஆன்லைன் ரம்மியில் ரூ.30 ஆயிரம் இழந்த இளைஞர் தூக்கிட்டு தற்கொலை: கீழக்கரையில் சோகம்

கீழக்கரை: கீழக்கரையில் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ரூ.30 ஆயிரம் இழந்த இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரையில் உள்ள மீனவர் குப்பத்தை சேர்ந்தவர் தங்கராஜ் மகன் பசுபதி (25). தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவர், கடனில் கார் வாங்கி, அதற்கு மாதந்தோறும் தவணைத் தொகை செலுத்தி வந்தார். கடந்த சில மாதங்களாக தவணைத் தொகை செலுத்தவில்லை என கூறப்படுகிறது. இதனால், கார் கடனை கட்ட வங்கியில் லோன் கேட்டு விண்ணப்பித்துள்ளார். ஆனால், பசுபதியின் வீடு ஓட்டு வீடு என்பதால் வங்கி நிர்வாகம் கடன் தருவதற்கு மறுத்தது. இந்நிலையில், தவணை தொகை செலுத்தாததால், கம்பெனி ஊழியர்கள் பசுபதியின் காரை எடுத்துச் சென்றனர். இதையடுத்து தவணை தொகை செலுத்தி காரை மீட்க ஆன்லைன் ரம்மி விளையாண்டு பணம் சம்பாதிக்க முடிவு செய்தார். ஆனால், ரம்மி விளையாண்டதில் பசுபதி ரூ.30 ஆயிரத்தை இழந்துள்ளார். இதில், மனமுடைந்த அவர், நேற்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்தார். இது குறித்து தந்தை தங்கராஜ் அளித்த புகாரின் பேரில், கீழக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

The post ஆன்லைன் ரம்மியில் ரூ.30 ஆயிரம் இழந்த இளைஞர் தூக்கிட்டு தற்கொலை: கீழக்கரையில் சோகம் appeared first on Dinakaran.

Tags : Chilakarai ,Keezhakarai ,
× RELATED இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கல்...