×

திமிரி அடுத்த வணக்கம்பாடியில் வேப்ப மரத்தில் பால் வடிந்தது: பொதுமக்கள் பரவசம்

கலவை: திமிரி அடுத்த வணக்கம்பாடியில் உள்ள வேப்பமரத்தில் இன்று காலை பால் கசிந்துள்ளது. இதையறிந்த அப்பகுதி மக்கள் ஏராளமானோர் திரண்டு கற்பூரம் ஏற்றி வழிபட்டனர். ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு-ஆரணி நெடுஞ்சாலையில் உள்ள திமிரி அடுத்த வணக்கம்பாடி கிராமத்தில் அங்காள பரமேஸ்வரியம்மன், ஓம்சக்தி அம்மன் கோயில்கள் உள்ளன. இந்த கோயில்களின் அருகே குளக்கரையில் வேப்பமரம் உள்ளது. தற்போது ஆடி மாதத்தையொட்டி அம்மன் கோயில்களில் தினசரி பூஜைகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இன்று காலை 8 மணி அளவில் அம்மனை தரிசனம் செய்ய பக்தர் ஒருவர் கோயிலுக்கு வந்தார். அப்போது வேப்பமரத்தில் திடீரென பால் கசிவதை கண்ட அவர் ஆச்சரியமடைந்து கிராம மக்களுக்கு தகவல் தெரிவித்தார். இதைகேட்டு பக்தர்கள் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் பால் கசிந்த வேப்பமரத்திற்கு சேலை அணிவித்து மஞ்சள், குங்குமம் பொட்டு வைத்தனர். மேலும் மலர்மலை சூடினர். பின்னர் கற்பூரம் ஏற்றி தேங்காய் உடைத்து தரிசனம் செய்து வருகின்றனர். இதையறிந்த சுற்றுப்புற கிராம மக்களும் ஏாளமானோர் அங்கு திரண்டனர். இதையறிந்த திமிரி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

The post திமிரி அடுத்த வணக்கம்பாடியில் வேப்ப மரத்தில் பால் வடிந்தது: பொதுமக்கள் பரவசம் appeared first on Dinakaran.

Tags : Timiri ,Vepambadi ,Thimiri ,
× RELATED ஆற்காடு அருகில் திரவுபதி அம்மன்...