×

டிராகன் சிக்கன்

தேவை:

எலும்பில்லாத சிக்கன் – 1 கிலோ
வெங்காயத்தாள் – 1 குச்சி
வெஜிடபிள் ஆயில் – தேவையான அளவு
நறுக்கிய இஞ்சி – 1/2 டேபிள் ஸ்பூன்
பூண்டு – 1/2 டேபிள் ஸ்பூன்
நறுக்கிய சில்லி ப்ளேக்ஸ் – 1 1/2 டீஸ்பூன்
தக்காளி சாஸ் – 8 அவுன்ஸ்
சோயா சாஸ் – 1 டேபிள் ஸ்பூன்
சர்க்கரை – 1/2 டீஸ்பூன்
கொத்தமல்லி – 1 கையளவு
நறுக்கிய வெங்காயம் – 1.
ஊற வைக்க
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 டீஸ்பூன்
மிளகுத்தூள் – 1 1/2 டீஸ்பூன்
முட்டை வெள்ளைக் கரு – 1
சோள மாவு – 2 டேபிள் ஸ்பூன்.

செய்முறை:

ஒரு கிண்ணத்தில் எலும்பில்லாத சிக்கனை நன்கு சுத்தமாக கழுவி எடுத்துக்கொள்ளவும். அதில் ஊற வைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து நன்றாக பிரட்டி, தனியாக 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும். பின்னர் அந்த சிக்கனை எண்ணெயில் போட்டு, பொன்னிறமாக பொரித்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின்பு நான்ஸ்டிக் தவாவை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அதில் இஞ்சி, பூண்டு சேர்த்து பொன்னிறமாக வதக்கி, சில்லி சாஸ் சேர்த்து கிளறி, தக்காளி சாஸ், சோயா சாஸ் மற்றும் சர்க்கரை சேர்த்து, கலவையை கொதிக்க விட வேண்டும். கலவையானது கொதிக்க ஆரம்பித்ததும், தீயை மிதமான சூட்டில் வைத்து, அதில் பொரித்து வைத்துள்ள சிக்கனை சேர்த்து, மூடி வைத்து 5 நிமிடம் வேக வைத்து இறக்க வேண்டும். இப்போது அருமையான டிராகன் சிக்கன் ரெசிபிஸ் ரெடி!!! இதன் மேல் கொத்தமல்லி மற்றும் வெங்காயத் தாள் தூவி அலங்கரித்து பரிமாறலாம்.

The post டிராகன் சிக்கன் appeared first on Dinakaran.

Tags : Dinakaran ,
× RELATED கடலில் பிளாஸ்டிக், ரசாயனம் கலப்பதை தடுக்க விழிப்புணர்வு படகு பயணம்