×

மணிப்பூரில் பழங்குடியின பெண்களை சித்திரவதை செய்த கொடூரனின் புகைப்படம் வெளியீடு

மணிப்பூர்: மணிப்பூரில் பெண்களை கொடூரமாக சித்திரவதை செய்த முக்கிய குற்றவாளியின் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. ஹெய்ரெம் ஹெரோதாஸ் என்ற நபர் காவல்நிலையத்தில் உள்ள புகைப்படம் வெளியாகியுள்ளது.

இடஒதுக்கீடு தொடர்பாக மணிப்பூரில் குக்கி மற்றும் மெய்டீஸ் ஆகிய இரு சமூகத்தினரிடையே கடந்த மே மாதம் 3ம் தேதி முதல் வன்முறை வெடித்து வருகிறது. இதனால் அப்பகுதியில் பாதுகாப்பு பணிகள் நடைபெற்று வரும் சூழலில், வன்முறையின்போது குக்கி சமூகத்தை சேர்ந்த பெண்கள் நிர்வாணப்படுத்தப்பட்டு ஊர்வலமாக அழைத்துச்செல்லப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் நாட்டையே கொந்தளிப்பிற்குள்ளாகியுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசியல் கட்சிகள், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் என பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் உச்சநீதிமன்றமே தாமாக முன்வந்து கடும் நடவடிக்கை எடுக்கக்கூடும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்நிலையில் இந்த கொடூர செயலை அரங்கேற்றிய முக்கிய குற்றவாளி நள்ளிரவில் கைதானதாக மணிப்பூர் முதலமைச்சர் தெரிவித்திருந்தார். இதையடுத்து பழங்குடியின பெண்கள் நிர்வாணப்படுத்தப்பட்டு ஊர்வலமாக அழைத்துச்செல்லப்பட்டு பாலியல் வன்கொடுமை அந்த கொடூரனின் புகைப்படம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

The post மணிப்பூரில் பழங்குடியின பெண்களை சித்திரவதை செய்த கொடூரனின் புகைப்படம் வெளியீடு appeared first on Dinakaran.

Tags : Koduran ,Manipur ,Heirem Herothas ,
× RELATED மணிப்பூரில் நிலநடுக்கம்