×

கலைஞர் மகளிர் உரிமைத்திட்ட சந்தேகங்களுக்கு கட்டுப்பாட்டு அறை: காஞ்சி கலெக்டர் தகவல்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி மோகன் வெளியிட்டுள்ள அறிக்கை: காஞ்சிபுரம் மாவட்டத்தில் காஞ்சிபுரம், வாலாஜாபாத், உத்திரமேரூர், பெரும்புதூர், குன்றத்தூர் ஆகிய வட்டாட்சியர் அலுவலகங்கள் உள்ளன. இந்த அலுவலகங்களில் கலைஞர் மகளிர் உரிமை திட்ட விண்ணப்பங்கள் பெற சிறப்பு முகாம்கள் நடத்துவதற்கு பொதுவிநியோக நியாய விலைக்கடைகள், அரசு பள்ளிகள், அங்கன்வாடிமையங்கள், இ-சேவை மையங்கள், வாக்குச்சாவடி மையங்கள், சமுதாய கூடங்கள் போன்றவை தேர்வு செய்யப்பட்டுள்ளன. மேலும் மகளிர் உரிமை திட்டத்திற்கான விண்ணப்பங்கள் பதிவு செய்தவற்கான முகாம் நடைபெறும் இடங்கள் பற்றி அறியவும், விண்ணப்பங்கள் தொடர்பான சந்தேகங்களை பூர்த்தி செய்ய ஏதுவாகவும், கலெக்டர் அலுவலகம் மற்றும் வட்டாட்சியர் அலுவலகங்களில் கட்டுப்பாட்டு அறைகள் துவக்கப்பட்டுள்ளன. கட்டுப்பாட்டு அறைகளின் விவரங்கள் பின்வருமாறு: மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள 044-27237107, 044-27237207 தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு சந்தேகங்களை தீர்த்துகொள்ளலாம். காஞ்சிபுரம் வட்டம்-044-27222776, வாலாஜாபாத் வட்டம்-044-27256090, உத்திரமேரூர் வட்டம்-044-27272230, பெரும்புதூர் வட்டம்-044-27162231, குன்றத்தூர் வட்டம்- 044-24780449 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.

The post கலைஞர் மகளிர் உரிமைத்திட்ட சந்தேகங்களுக்கு கட்டுப்பாட்டு அறை: காஞ்சி கலெக்டர் தகவல் appeared first on Dinakaran.

Tags : Kanji Collector ,Kanchipuram ,Kalachelvi Mohan ,Walajabad ,Uttaramerur ,Perumbudur ,Kunradathur ,Kanchipuram district ,
× RELATED காஞ்சிபுரம், செங்கல்பட்டு...