×

குரோம்பேட்டையில் எம்.ஐ.டி. கல்லூரி வளாகத்தில் 1000 பேர் அமரக்கூடிய வகையில் மிகப்பெரிய அரங்கம் அமைக்கப்படும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை

சென்னை: குரோம்பேட்டையில் எம்.ஐ.டி. வளாகத்தில் 1000 பேர் அமரும் வகையில் ஏ.சி வசதியுடன் மிகப்பெரிய அரங்கம் அமைக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை குரோம்பேட்டையில் மெட்ராஸ் தொழில்நுட்ப கல்லூரி பவள விழாவை தொடங்கி வைத்து முதலமைச்சர் உரையாற்றினார். அப்போது பேசிய அவர்,

எம்.ஐ.டி. கல்வி நிறுவனத்தால் தமிழ்நாட்டுக்கே பெருமை:

இந்தியாவின் புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களின் பட்டியலில் தமிழ்நாட்டு பல கல்வி நிறுவனங்கள் உள்ளன. தமிழ்நாட்டின் சிறந்த கல்வி நிறுவனங்கள் பட்டியலில் எம்.ஐ.டி. இடம்பெற்றுள்ளது. மாணவர்களின் வழிகாட்டியும் இளைஞர்களின் நம்பிக்கை நட்சத்திரமாகவும் விளங்கிய அப்துல்கலாம் படித்த கல்லூரி எம்.ஐ.டி.. அப்துல்கலாம் படித்த கல்லூரி என்பதை விட எம்.ஐ.டி.க்கு வேறு பெருமை தேவையில்லை என்று முதலமைச்சர் தெரிவித்தார்.

எம்.ஐ.டி. வளாகத்தில் மாபெரும் அரங்கம்:

குரோம்பேட்டையில் எம்.ஐ.டி. கல்லூரி வளாகத்தில் ஆயிரம் பேர் அமரக்கூடிய வகையில் மிகப்பெரிய அரங்கம் அமைக்கப்படும். எம்.ஐ.டியில் அதிநவீன உள் விளையாட்டு அரங்கத்துடன் இணைந்த கலையரங்கம் கட்ட ரூ.50 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கற்றல் வளாகம், பவள விழா பூங்கா அமைக்க ரூ.25 கோடி வழங்கப்படும். சென்னை தொழில்நுட்ப கல்லூரி பவள விழாவை தொடங்கி வைத்து உரையாற்றிய முதல்வர் அறிவித்துள்ளார்.

நான் முதல்வன் திட்டம்:

1975-ல் நடந்த வெள்ளி விழாவில் அன்றைய பிரதமர் இந்திரா காந்தி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். வாரிசுகள் நினைத்தால் பல தலைமுறைகளுக்கு சேவையாற்ற முடியும். தமிழ்நாட்டு மாணவர்கள் அறிவாற்றலில் முதலிடத்துக்கு வர வேண்டும் என்பதற்காக நான் முதல்வன் திட்டம் கொண்டு வரப்பட்டது. நான் முதல்வன் திட்டத்தின்கீழ் எம்.ஐ.டி.யில் பல ஆயிரம் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

எம்.ஐ.டி. நிறுவனமானது இந்தியாவின் தலைசிறந்த நிறுவனமாக பல ஆண்டு காலமாக செயல்பட்டு இன்று பவள விழாவை கண்டுள்ளது. எம்.ஐ.டி. வளாகத்தில் பல்வேறு திட்டங்களுக்கும், பல மையங்கள் உருவாக்குவதற்கும் தமிழ்நாடு அரசு நிதியுதவி செய்து வருகிறது. வான்வழி ஆராய்ச்சி மையத்தை எம்.ஐ.டி.யில் உருவாக்க அரசு உதவி செய்தது என்று முதலைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அனைவரும் உயர்கல்வி அளித்த நடவடிக்கை:

அனைவருக்கும் உயர்கல்வி, ஆராய்ச்சி வேண்டும் என்பதுதான் திராவிட மாடல் ஆட்சியின் நோக்கம். தானியங்கி பொறியியல் என்ற சிறப்புறுமையத்தை அமைக்க ரூ.50 கோடியை தமிழ்நாடு அரசு ஒதுக்கீடு செய்தது. தானியங்கி பொறியியல் துறையில் 8 ஆய்வுக் கூடங்கள் அடங்கிய 2,700 சதுர அடியில் கட்டடம் ஒன்று கட்டப்பட்டது. மருத்துவம் முதல் ராணுவம் வரை தொழில்நுட்பம்தான் தற்போது வழிநடத்தி கொண்டிருக்கிறது என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

The post குரோம்பேட்டையில் எம்.ஐ.டி. கல்லூரி வளாகத்தில் 1000 பேர் அமரக்கூடிய வகையில் மிகப்பெரிய அரங்கம் அமைக்கப்படும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை appeared first on Dinakaran.

Tags : M. ,chrompet ,GI TD ,CM G.K. Stalin ,M. GI TD ,GI ,TD ,
× RELATED தேர்தல் பிரச்சாரத்தின் போது திமுக...