×

மணிப்பூர் கலவரம் குறித்து பிரதமர் மோடி விளக்கம் அளிக்க எதிர்க்கட்சிகள் முழக்கம்: நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு

டெல்லி: பரபரப்பான அரசியல் சூழலில் நாடாளுமன்றம் இன்று கூடியுள்ளது. இன்று முதல் ஆகஸ்ட் 11-ம் தேதி வரை நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெற உள்ளது. மணிப்பூரில் பெண்கள் நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்துச் சென்று வன்கொடுமை செய்யப்பட்டது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கியுள்ள மணிப்பூர் சம்பவம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளது. பரபரப்பான அரசியல் சூழலில் நாடாளுமன்றம் இன்று கூடியுள்ளது. மணிப்பூரில் நடந்த கொடூரத்துக்கு உச்சநீதிமன்றமும் கடும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில் நாடாளுமன்றம் கூடியுள்ளது. மழைக்கால கூட்டத்தொடரில் 31 மசோதாக்களை தாக்கல் செய்ய ஒன்றிய அரசு திட்டமிட்டிருந்தது.

இந்நிலையில் மணிப்பூர் கலவரம் குறித்து இன்றே நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளும் வலியுறுத்தியுள்ளது. மணிப்பூரில் கலவரம், பெண்களுக்கு நடந்த கொடூரம் குறித்து பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் விளக்கம் அளிக்க எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியது. விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பின்மை போன்ற நாட்டு மக்களின் பிரச்சனைகள் குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்ப எதிர்க்கட்சிகள் முடிவு செய்தனர். மணிப்பூர் உள்ளிட்ட முக்கிய பிரச்சனைகள் குறித்து உடனடியாக விவாதிக்க மறுத்ததால் மாநிலங்களவையில் முழக்கம் எழுப்பினர். தொடர் முழக்கம் காரணமாக நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மாநிலங்களவை நண்பகல் 12 மணி வரையும், மக்களவை பிற்பகல் 2 மணி வரையும் ஒத்திவைக்கப்பட்டது.

The post மணிப்பூர் கலவரம் குறித்து பிரதமர் மோடி விளக்கம் அளிக்க எதிர்க்கட்சிகள் முழக்கம்: நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு appeared first on Dinakaran.

Tags : Modi ,Manipur riots ,Delhi ,Parliament ,
× RELATED மணிப்பூரில் நடந்த நிர்வாண ஊர்வலம்; 2...