நெல்லை: நெல்லையில் பா.ஜ.க. எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரன் மகனின் ரூ.100 கோடி மதிப்பிலான பத்திரப்பதிவு ரத்து செய்யப்பட்டுள்ளது. ராதாபுரம் சார் பதிவாளர் அலுவலகத்தில் மோசடியாக பதியப்பட்ட ஸ்ரீநயினார் பாலாஜியின் ரூ.100 கோடி மதிப்பிலான பத்திரப்பதிவு ரத்து செய்யப்பட்டுள்ளது. மோசடியாக பத்திரப்பதிவு செய்துள்ளதாக அறப்போர் இயக்கம் குற்றம் சாட்டியிருந்தது. மதுரையைச் சேர்ந்த இளையராஜா என்பவர் நயினார் பாலாஜியுடன் இணைந்து மிகப்பெரிய பத்திரப்பதிவு மோசடியில் ஈடுபட்டுள்ளார். விருகம்பாக்கத்தில் உள்ள 1.3 ஏக்கர் நிலத்தை மோசடியாக சம்பந்தமே இல்லாத ராதாபுரம் அலுவலகத்தில் பத்திரப்பதிவு செய்யப்பட்டது.
ராதாபுரம் அருகே உதயத்தூரில் உள்ள சில சொத்துகள், விருகம்பாக்கம் சொத்துகளை சேர்த்து பத்திரப்பதிவு செய்துள்ளனர். ராதாபுரம் சார்பதிவாளராக இருந்த சரவணமாரியப்பன் பதிவுசெய்துள்ளார் என புகார் எழுந்தது. இந்நிலையில் ரூ.100 கோடி மதிப்பிலான பத்திரப்பதிவை ரத்து செய்து மண்டல துணை பத்திரப்பதிவு துறை தலைவர் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டார். தமிழக மாநில பாஜக இளைஞர் அணி துணைத்தலைவாராக பாலாஜி இயங்கி வருகிறார்.
The post நெல்லையில் பா.ஜ.க. எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரன் மகனின் ரூ.100 கோடி மதிப்பிலான பத்திரப்பதிவு ரத்து appeared first on Dinakaran.